புதுடில்லி.டிச. 2 அரியா னாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட் டத்தின் போது நீர் பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்தி 10-த்திற்கும் மேற்பட்ட முதிய வயது விவசாயிகளைக் காப்பாற்றிய இளைஞர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறை வேற்றியதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதி லுமுள்ள விவசாயிகள் பல திசைகளில் இருந்து டில் லிக்குள் நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இதனை அரியானா, உபி அரசுகள் கடுமையான தாக் குதல்கள் மூலம் நடத்தித் தடுத்து வருகிறது.
அரியானா மாநிலம் தேசிய நெடுஞ்சாலை 44 இல் உள்ள அம்பாலா மாவட்டத் தில் டில்லிக்குச் செல்ல சுமார் 5000 விவசாயிகள் ஊர்வல மாகச் சென்றுகொண்டு இருந்தனர். இந்த டில்லி சாலோ அணிவகுப்பை அரி யானா காவல்துறை தடுத்து நிறுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தது. தடியடி கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீர் பீரங்கி கொண்டு கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். தண் ணீர் பீரங்கி பயன்படுத்திய போது பலர் அங்கிருந்து விலகிவிட சுமார் 10க்கும் மேற்பட்ட முதியவர்கள் தரையில் விழுந்துவிட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து தண்ணீர் பீரங்கியைப் பயன்படுத்தி வந்தனர். அப்போது நவ்தீப் சிங் என்ற 25 இளைஞர் தண்ணீர் பீரங்கியில் ஏறி அதை அணைத்து முதியவர் களைக் காப்பாற்ற முயற்சி செய்தார். இந்த நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் வைர லாகியது.இதனை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் ஊடகவியலாளர் களிடம் பேசியபோது, “படிப் புக்குப் பிறகு, எனது தந்தை யுடன் விவசாயம் செய்யத் தொடங்கினேன். நான் ஒரு போதும் எந்தவொரு சட்ட விரோத செயல்களிலும் ஈடு படவில்லை, எதிர்ப்பு தெரி விக்கும் விவசாயிகளின்மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட் டது --_ அப்போது முதியவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர் களைக் காப்பாற்ற அந்த குழாயை அணைக்க வேண் டும் என்ற துணிச்சலுடன் நான் முன்னேறிச்சென்றேன். நாங்கள் அமைதியாக டில் லிக்குச் செல்ல முயன்றோம், ஆனால் காவல்துறையினரால் தடுக்கப்பட்டோம்.
அரசாங்கத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பவும், மக்கள் விரோதச் சட்டங்கள் ஏதேனும் இயற்றப்பட்டால் எதிர்ப்பதற்கும் எங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. நாங்கள் எங்கள் வழியிலுள்ள அனைத்து தடுப்புகளையும் உடைத்து டெல்லியை அடைந்தோம் என்று நவ்தீப் கூறியுள்ளார், இவர் குரு சேத்ரா பல்கலைக்கழகத்தில் 2015 இல் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தடைகளை அகற் றியது தொடர்பாக சுமார் 10000 விவசாயிகள் மீது அரி யானா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அம்பாலா மாவட்ட காவல்துறை உறுதி செய்து உள்ளது.
விவசாயிகள் மீது அரி யானா பா.ஜ.க அரசு கொலை முயற்சி, கலவரம் செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ராஜஸ் தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மூன்று லட்சம் விவசாயிகள் டில்லி போராட்டத்துக்கு வந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment