கோடை விடுமுறைக்கு 1944இல் மாணவர் பயிற்சி முகாம் ஈரோட்டில் நடத்தினார்கள். அதற்கு வரும்படி பெரியாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஈரோடு சென்றோம்.
ஈரோடு பயிற்சி முகாம் முடிந்து மாணவர் குழு ஒவ்வொரு மாவட்டமாகப் பிரித்துப் பிரச்சாரத்துக்கு அனுப்பப்பட்டனர். தென்னார்க்காடு மாவட்டத்திற்கு நானும் நண்பர் கருணானந்தம் மற்ற குடந்தை மாணவர்களும் அனுப்பப்பட்டோம். தென்னார்க்காடு மாவட்டத்தில் திரு.மா.பீட்டர் அவர்கள் சுற்றுப் பயணத்தை எடுத்து நடத்தினார்கள். அப்போது எங்களுக்கு திரு.ஆ.திராவிடமணி அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட சிறுவன் கி.வீரமணியின் நட்பு கிடைத்தது. அவரும் எங்களுடன் சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டார்.பின் சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடந்தது. அம்மா நாட்டில்தான் சரித்திரச் சிறப்பு பெற்ற திராவிடர் கழகம் எனும் பெயர் மாற்றும் தீர்மானமும், அண்ணாவின் தீர்மானம் என்ற பெயரில் வெள்ளையர் தந்த பட்டம் பதவிகளை கட்சியினர் துறக்க வேண்டும் என்ற தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. அம்மாநாட்டில் அழைப்பிதழில் பெயரில்லாத ஒருவர் பேச அனுமதிக்கப்பட்டார். அவர்தான் நண்பர் கி.வீரமணி. வீரமணி பேசியபின் அறிஞர் அண்ணா அவரை மிகவும் பாராட்டிப் பேசினார்.
- (கவிஞர் கருணானந்தம் மணிவிழா மலரில் இயக்க முன்னோடி தவமணிராசன்)
No comments:
Post a Comment