ஆங்கில நூல்கள் படிப்பவர்கள் விவசாயிகளா பா.ஜ.க. தலைவர் கிண்டல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 6, 2020

ஆங்கில நூல்கள் படிப்பவர்கள் விவசாயிகளா பா.ஜ.க. தலைவர் கிண்டல்

ஆங்கில நூல்கள் படிப்பவர்கள் விவசாயிகளா?  பா.ஜ.க. தலைவர் கிண்டல்


புதுடில்லி, டிச.6 தலைநகர் டில்லியில் 10 நாளாகாக நடந்து வரும் போராட்டம் ஆளும் தரப்பினர்களுக்கு எரிச்சலை அளித்துள்ளது, இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த பாஜக தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித்மாளவியா பேசும் போது, நாம் கண்ட விவசாயிகள் உழைப்பாளிகள் எளிமையின் மறு உருவம் மனிதாபிமானத்தின் அடையாளம், கருணை கொண்ட அந்த முகங்களைக் கண்டாலே நமக்கு மரியாதை செலுத்தத்தோன்றும்.


ஆனால், டில்லியில் வந்த விவசாயிகள் என்ற பெயரில் உள்ளவர்கள் போராட்டக் களத்தில் ஆங்கிலப் புத்தகம் படிக்கிறார்கள், அயல்நாட்டு ஊடகங்களுக்கு ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்கிறார்கள். பிக்னிக் செல்வது போல் ஆடம்பர ஆடைகளை அணிந்து கொண்டு சாலைகளில் திரிகின்றனர். இவர்கள் உண்மையில் விவசாயிகள் தானா? என்று கேள்வி எழுப்பினார்.


 இவர்களைப் பொருத்தவரை இடுப்பில் ஒரு துண்டு, ஒல்லியான தேகம், ஒட்டிப் போன கன்னம், எண்ணையே காணாத தலைமுடி மற்றும் செருப்பு அணியாத கால்களும், பூஞ்சை பூத்த கண்களோடு தங்களின் வட்டார மொழியைத் தவிர வேறு எதுவும் தெரியாமல் இருப்பவர்களே விவசாயிகள் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும், அதாவது இன்றும் விவசாயிகள் என்பவர்கள் கொத்தடிமைகள் என்ற நினைப்பில் உள்ளனர்.


வேளாண் சட்டத்துக்கு பாஜக கூட்டணியிலேயே வெடிக்கும் எதிர்ப்பு:


சிரோமணி அகாலிதளம் கட்சி விலகலைத் தொடர்ந்து மேலும் ஒரு கட்சி வெளியேறப்போவதாக எச்சரிக்கை


ஜெய்ப்பூர்,டிச.6 மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் கட்சி விலகி விட்டது.


இப்போது இராஜஸ்தானில் உள்ள பிராந்திய கட்சியான ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியும், “விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களிலிருந்து விவசாயிகள் டில்லியில் கடந்த 10 நாள்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.


“டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நிபந்தனையின்றி பேச்சு நடத்துவதுடன், விவசாயி களுக்கு எதிரான மூன்று கறுப்பு சட்டங்களையும் விலக்கி கொள்ள வேண்டும்” என லோக்தந்திரிக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹனுமான் பெனிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டுக்கொண்டுள்ளார்.


“விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


கடந்த மக்களவை தேர்தலில் இராஜஸ்தானில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பெனிவால், நாகர் மக்களவை உறுப்பினராக உள்ளார். மேலும் கூட்டணியில் அந்த கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக மூவர் உள்ளனர். ஜாட் சமூகத்தினரிடையே செல்வாக்குள்ள இந்த கட்சி சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. வேளாண் சட்டத்திருத்தத்துக்கு நாடுமுழுவதும் எதிர்க் கட்சிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், பாஜகவின் விவசாயப் பிரிவும்கூட எதிரப்பு தெரிவித்து வருகிறது. பாஜக கூட்டணியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


மூவர்மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்த அர்ச்சகர் கைது


நாகர்கோவில், டிச.6  குமரி மாவட்டம், நாகர்கோவில் கணபதி புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சதீஷ், காளி ஆகிய மூவரும் கடந்த 3 ஆம் தேதியன்று காலை சன்னதி தெருவிலுள்ள நூலகம் முன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, நூலகத்தின் எதிரே வசிக்கும் ராஜசேகரன் (வயது 40) என்பவர், மூன்றுபேர்மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதை எதிர்பாராத அம்மூவரும் செய்வதறியாது கதறினார்கள். பற்றிக்கொண்ட தீ மூவர் உடலிலும் வேகமாக பரவியது. அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து, மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.


தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற ராஜாக்கமங்கலம் காவல்துறையினர், அர்ச்சகர் ராஜசேகரனை பிடிக்க முயன்றபோது, வீட்டுக்குள் சென்று கதவை அடைத்தார். கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர் மீதும், பெட்ரோலை ஊற்றியுள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜசேகரன் கோவிலில் பூஜை செய்வதைக் கிண்டல் செய்ததால், மூவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment