என்ன விசேடம்?
துணைவேந்தர் சூரப்பா போன்ற நேர்மையாளர் பாதிக்கப்பட்டால் சும்மா இருக்கமாட்டோம்! - கமல்காசன்
விசாரணை ஆணையம்தானே அமைக்கப்பட்டு உள்ளது! இவர் ஏன் பதறுகிறார்? என்ன விசேஷம்?
‘கிடந்தது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை!'
நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டடம் - அடுத்த வாரம் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்.
பொருளாதாரம் மைனசில் ஓடிக்கொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ரூ.861 கோடியில் நாடாளுமன்ற கட்டடம் தேவையா?
பூண்டு,
வெங்காயம்!
வேளாண்மை சட்டங்கள் அவசர கதியில் கொண்டு வரப்பட்டவை அல்ல. - நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்.
வெங்காயம், பூண்டு சாப்பிடாத பரம்பரையினருக்கு விவசாயத்தைப்பற்றி என்ன தெரியும்? (விவசாயம் பாவத் தொழில் என்கிறதே மனுதர்மம்).
எதிலும்
அரசியலா?
செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தால் 10 ஆண்டுகளாக வழங்கப்படாத ‘கலைஞர் தமிழ் விருது!'
எதிலும் அரசியல் என்பது மிகப்பெரிய ஆபத்து.
ஆகா, என்னே ஜனநாயகம்!
இன்று பாபர் மசூதி இடிப்பு நாள்.
தலைகுனிய வேண்டிய நாள் - இடித்தவர்கள் ஆட்சியிலும் இருக்கிறார்கள் - இடித்தவர்களிடமே இடிக்கப்பட்ட இடமும் சொந்தம்!
ஆகா, என்னே ஜனநாயகம் - என்னே நீதி!
மதம் பிடிக்க வேண்டாம்!
உத்தரப்பிரதேசத்தில் மத மாற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏழு பேர் கைது!
அரசுக்கு ‘‘மதம்'' பிடிக்கக் கூடாது!
அறிவியல்
கருத்து!
சரியான உடற்பயிற்சி இல்லாமையால் மனச்சோர்வு - கவலையும் உண்டாகிறது.
கவனிக்க வேண்டிய அலட்சியப்படுத்தக் கூடாத அறிவியல் கருத்து இது.
No comments:
Post a Comment