ஒருவர் ஜாதி, மதம் கடந்து தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்வது அடிப்படை உரிமை
பெங்களூரு,டிச.4 ஜாதி, மதம் கடந்து ஒருவர் தன்விருப்பப்படி திருமணம் செய்துக்கொள்வது அவரது அடிப் படை உரிமை என கருநாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த மென் பொருள் பொறியாளர் வாஜித் கான் கடந்த வாரம் கருநாடக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "என்னுடன் பணியாற்றும் மென் பொருள் பொறியாளர் ரம்யாவும் நானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். எங்களது திருமணத்துக்குஎனது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். ரம் யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரி வித்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் திரு மணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், ரம்யா பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். எனவே, ரம்யாவை நீதிமன்றத்தில் நேரில்ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுஜாதா மற்றும் சச்சின் சங்கர் ஆகியோர் முன்பு டிசம்பர் முதல் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது,
"நாட்டில்திருமண வயதை கடந்த ஒரு ஆணோ, பெண்ணோ தனது விருப்பப்படி திருமணம் செய்துகொள்வதற்கான உரிமையை இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கி யிருக்கிறது. ஜாதி, மதம் உள்ளிட்ட பேதமின்றி தனக்கு விருப்பமான ஒருவரை திருமணம் செய்துகொள்வது அவரது அடிப்படை உரிமை ஆகும். இதனை உச்சநீதிமன்றமும் வேறு சில உயர்நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகளின் மூலம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளன. ரம்யா திருமண வயதைகடந்தவர் என்பதால் தனது வாழ்க்கை குறித்து முடிவு எடுக்கஅவருக்கு முழு உரிமை இருக்கிறது. எனவே அவரை மகளிர் காப்பகத்தில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்" என உத்தரவில் குறிப்பிட்டனர். திருமண வயதைக் கடந்த ஒரு ஆணோ, பெண்ணோ தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கி யிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் அண்மை யில் மதம் மாறி திருமணம் செய் வதை தடுக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை பின்பற்றி கருநாடகாவிலும் திருமணத்துக்காக மதம்மாறுவதை தடுக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அம்மாநில பாஜக முதல்வர் எடியூரப்பா தெரி வித்துள்ள நிலையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment