எந்தக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டும்?
- ஆளூர் ஷா நவாஸ்
துணைப் பொதுச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி
இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு. கல்வியில், மருத்து வக் கட்டமைப்பில், தொழில் வளர்ச்சியில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. இங் குள்ள வளர்ச்சி என்பது குஜராத் மாடல் வளர்ச்சி அல்ல; உண்மையான வளர்ச்சி, சீரான வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி. இதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது இங்கே பின்பற்றப்படும் சமூக நீதிக் கொள்கையே ஆகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சமூக நீதிக்காக முதன்முதலில் திருத்திய பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. அதற்காக முதலமைச்சர் காமராசருக்கு ஊக்கம் தந்து, களத்தைக் கட்டமைத்தவர் அய்யா பெரியார். அதுபோல், இந்தியா வில் எங்கும் இல்லாத வகையில் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் பின்பற்றப்படு கிறது எனில், அதற்கு சட்டப்பாதுகாப்பு தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பக்கத் துணையாக நின்று வழிகாட்டியவர் ஆசிரியர் கி.வீரமணி.
ஆக, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சமூக நீதிக் கொள்கை காரணமெனில், அந்தக் கொள்கை நிலைப்பதற்கு பெரியாரும் அவர் வழிவந்த ஆசிரியரும் காரணம். அந்த நன்றியுணர்வோடு தான் ஒவ் வொரு பொழுதும் நான் பெரியாரையும் ஆசிரியரையும் திராவிட இயக்கத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். மேடைகளில், ஊடகங்களில், சந்திப்புகளில் என்று எங்கெங்கு பேச வாய்ப்பு கிடைத்தாலும் இந்த உண்மைகளைப் பகிர்கிறேன்.
100 ஆண்டுகளாக திராவிட இயக்கம் போராடி அடைந்த உரிமைகள் ஒவ் வொன்றும் இன்று பறிபோகின்றன. புரட் சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் போன்ற மகத்தான தலைவர்களின் கடும் உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் இப்போது வழிப்பறி செய்யப்படுகின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. உயர்பதவிக ளில் இடஒதுக்கீடு என்பதே இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதன் மூலம் இடஒதுக்கீடு முற்றாக ஒழிக்கப்படுகிறது. எஞ்சியிருக் கும் இடஒதுக்கீட்டில் கூட பொருளாதார அளவுகோலைப் புகுத்தி, சீர்குலைக்கும் செயல்கள் நடக்கின்றன. காலமெல்லாம் இடஒதுக்கீட்டை யார் யார் எதிர்த்தும் வெறுத்தும் வந்தார்களோ அந்த முற்பட்ட சமூகத்தினருக்கே இடஒதுக்கீட்டை வழங் கும் அநியாயமும் அரங்கேறி வருகிறது.
இத்தகைய கொடுங் காலத்தில் நமக் கான போர் வாளாகவும் கேடயமாகவும் விளங்கும் பேராற்றல் மிக்க தலைவர் ஆசிரியர் அவர்களே. இடஒதுக்கீடை ஒழித்துக்கட்ட நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் உடனுக்குடன் நம் கவனத்திற்கு அவர்தான் கொண்டுவரு கிறார். சட்ட நுணுக்கங்களை சொல்லித் தருகிறார். வரலாற்றுத் தரவுகளை அடுக்கி வாதிடுகிறார். அறிக்கைகள், கட்டுரைகள் தீட்டுகிறார். கூட்டங்களில், காணொலி களில் பேசுகிறார். அனைத்துக் கட்சிக ளைக் கூட்டி விவாதிக்கிறார். போராட்ட உத்திகளை வகுக்கிறார். சமூக நீதிக் களத்தை கூர்தீட்டுகிறார். இப்படி துடிப்பு டன் ஆசிரியர் இந்த வயதிலும் இயங் குவதனால் தான், தமிழ்நாட்டில் சமூகநீதி நெருப்பு அணையாமல் சுடர் விடுகிறது. இனப்பகைவர்களுக்கும் அதுவே எரிச் சலைத் தருகிறது. எனவே தான் அவர்கள், ஆசிரியரைக் குறிவைத்து அவதூறு களைச் செய்கின்றனர். மலிவான சொற் களால் விமர்சிக்கின்றனர். அவரை வெகு மக்கள் விரோதியாகச் சித்தரிக்கின்றனர். எந்த விமர்சனங்களுக்கும் இழி பரப்பு ரைகளுக்கும் அஞ்சாமல், துளியளவு கூட சோர்வடையாமல் மேலும் மேலும் ஊக் கத்துடன் பயணம் செய்கிறார் நம் ஆசிரியர்.
இந்துக்களின் எதிரி என்று ஆசிரியரை அடையாளப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஒருபோதும் இந்த இந்து மக்களின் கல்விக்கோ, வேலை வாய்ப்புக்கோ, முன்னேற்றத்திற்கோ எதையும் செய்த தில்லை. மாறாக, இந்து மக்களுக்கு நன்மை செய்த வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தார்கள். ஆனால், இந்து மக்களின் முன்னேற்றத்திற்கு நாளெல்லாம் உழைக் கும் தலைவர் ஆசிரியரே. இதை அந்த மக்கள் புரிந்திருப்பதனால் தான், இங்கே பாஜக நோட்டாவுக்கு கீழே போகிறது. ஆசிரியர் ஆதரித்து பரப்புரை செய்யும் அரசியல் கட்சிகள் பெரும் வெற்றி பெறுகின்றன.
தனிப்பட்ட முறையில் என்னைப் போன்றோர் இன்று அரசியல் அரங்கில் வீச்சுடன் பயணிப்பதற்கு பெரியார் திடலும், விடுதலை வாசகர் வட்டமும், ஆசிரியரின் கருத்தாழமிக்க உரைக ளுமே காரணம். எந்தத் திசைவழியில் பயணமாக வேண்டும், எந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும், எந்தக் கோட் பாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்னும் தெளிவை எனக்கு 'திடல்' தான் ஊட்டியது. நட்பு முரண் பகை முரண் குறித்த புரிதலை பெரியாரியம் தான் சொல்லித் தந்தது. தர்க்க அறிவை வளர்ப் பதற்கும், எதையும் கேள்வி கேட்டுப் புரிவதற்கும் திராவிடர் கழகமே பாட சாலையாக அமைந்தது.
பெரியார் இறந்து பத்து ஆண்டுகள் கழிந்து பிறந்தவன் நான். இன்று பெரியாரி யவாதியாய் அரசியல் களத்தில் களமாடு கிறேன் எனில் அதற்குக் காரணம், ஆசிரி யரே! பெரியாரை நான் கண்டதில்லை; ஆசிரியரைத் தான் காண்கிறேன். ஆசிரி யர் நீடுழி வாழ்ந்து வழிகாட்ட வேண்டும்.
No comments:
Post a Comment