விநாசகாலே...
வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் விரிவு படுத்தப்படும்: - விவசாய அமைப்புகள் கூட்டாக எச்சரிக்கை!
வீண் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால் நல்லது - இல்லையெனின் 'விநாச காலே விபரீத புத்தியே!'
மனுதர்மப் பார்வையா?
அவதூறு வீடியோ வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கைது.
பி.ஜே.பி. தேசிய செயலாளராகவிருந்த ஒருவர் நீதிபதிகளை விமர்சித்ததை விடவா? இதிலும் மனுதர்மப் பார்வையா?
முதலையும், மூர்க்கனும்!
விவசாயிகளுக்கு ஆதரவாக வட இந்தியாவில் வரும் 8 ஆம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம்.
‘முதலையும், மூர்க்கனும் கொண்டது விடார்' என்பது பழமொழி.
இலட்சணம் இது!
தமிழ்நாட்டில் 61 நாள்களுக்குப் பிறகு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைவிட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
கரோனாவை ஒழிக்கும் இலட்சணம் இதுதான்!
தொடக்கமில்லா முடிவோ!
திருச்செந்தூரில் டிசம்பர் 7 இல் வேல் யாத்திரை நிறைவு பெறும்: - எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர்.
எல்லாம் முடிவுதான்! எங்கே ஆரம்பித்தனர் - எங்கே பயணித்தனர் - இதில் பயண நிறைவாம்!
நல்ல முடிவு!
மருத்துவக் கல்விக்குக் கட்டணம் செலுத்த முடியாமல் வாய்ப்பைத் தவற விட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இடம்: - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
நல்ல முடிவு - வரவேற்கத்தக்கதே!
கிரிக்கெட் என்றாலே சூதாட்டம்தானா?
கிரிக்கெட் சூதாட்டக் கடனை அடைக்க தாய், தங்கையைக் கொலை செய்த பொறியியல் மாணவர் கைது.
பார்ப்பனீயம் குடிபுகுந்த எந்தத் துறையும் இப்படித்தான். (விளையாட்டுகளில் கிரிக்கெட் மட்டிலுமே இந்தச் சூதாட்டம் உச்சம்!)
சந்தேகம்தான்!
வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் வாக்கு - தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரும்.
தபால் வாக்கு என்றாலே சந்தேகப்படும் நிலைதான் - அந்த அளவுக்கு நேர்மை?
வெளியில் வரும் பூனைக்குட்டி
பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் அழுத்தம் இருந்தது. எனவே, நான் ராஜினாமா செய்தேன்: - அய்.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு
பூனைக்குட்டி வெளியில் வருகிறது.
கண் துடைப்பு நாடகம்!
நிவர் புயல் பாதிப்பைப் பார்வையிட தமிழகத்திற்கு வரும் மத்திய குழுவின் வருகை தள்ளி வைப்பு.
எல்லாம் சீரான பிறகு - பாதிப்பை எங்கிருந்து பார்க்கப் போகிறார்களாம் - எல்லாம் கண்துடைப்பே!
கைவிரிப்பு!
அனைவருக்கும் தடுப்பூசி என்று சொல்லவேயில்லை: - மத்திய அரசு அறிவிப்பு
அப்படியென்றால் யாருக்குத்தான் தடுப்பூசியோ!
No comments:
Post a Comment