தன்மானத்தமிழர்தலைவர் ஆசிரியர் அய்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 2, 2020

தன்மானத்தமிழர்தலைவர் ஆசிரியர் அய்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


வாழிய செந்தமிழர் (ஆசிரியர்) வாழிய  வாழியவே!


வளம் கொழிக்க தமிழர் நலம் காக்க நாளும் உழைக்கும் நம் ஆசிரியர் வாழிய வாழியவே !


தாழ்ந்த சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ தன்னலம் கருதாமல் உழைக்கும் தன்மானத்தமிழர் ஆசிரியர் அய்யா  வாழிய வாழியவே !


ஒடுக்கப்பட்டோர், நசுக்கப்பட்டோர் உயர்வுதனை ஒழிக்க நினைக்கும் இறுமாப்பு எத்தர்களை இடித்துரைத்து சளைக்காமல் சாடிடும் சான்றாளர் அய்யா ஆசிரியர் வாழிய வாழியவே !


வசை பாடும் அறிவீலிகளை, அவர் மனங்கோணா நல் வார்த்தைகளால் உணர்வுகொள்ள சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் ஆசிரியர் அய்யா வாழிய வாழியவே !


அரசாளும் மாந்தர்கள் திசை மாறி சென்றால் வளம் சேர்க்கும் வார்த்தைகளால்  மனம்திருந்த வைக்கும் மாண்புடை மாமனிதர் அய்யா ஆசிரியர் வாழிய வாழியவே !


இந்நாட்டில் எதிர்வினை அனைத்தையும்  உடனடியாக முதல் மனிதராய் எதிர்கொள்ளும் உத்தமத்தலைவர் ஆசிரியர் அய்யா  வாழிய வாழியவே !


எண்பத்து எட்டு அகவையிலும் தளராத நெஞ்சுரத்தோடு தன்மானச்சிங்கமாய் மானமிக்கமாமனிதராய்  எதிர் நீச்சல் போடும் எம் தமிழர்த்தலைவர் அய்யா  ஆசிரியர் வாழிய  வாழியவே !


உடல் நலம் பாராமல்  உழைக்கும் வர்க்கம்  உயர வேண்டும் என்று உழைக்கும் உன்னதத்தலைவர் ஆசிரியர்  அய்யா வாழிய வாழியவே !


பண்பட்ட மனிதராய்,  


பார் போற்றும் பாவலராய், பரிதவிக்கும்மக்களுக்கு


பாசமுள்ள பாங்காளராய்,  உங்களுக்கு நிகர்  யார் உளர் இப்பாரினியில்  என்று பெருமிதம் கொள்வோம்   ஆசிரியர் அவர்களை உலகமே போற்றி வணங்கி, பாராட்டி மகிழும் இந்நன்நாளில் நீவீர் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்,


ஓய்வறியாஒளிவிளக்கே,  ஒப்பற்ற நின் பணி ஒளி மிளிர, உங்கள் புகழ் ஓங்க, உங்கள் நலம் செழிக்க,  நீங்கள் பன்னெடுங்காலம் நிலைத்த புகழோடு வாழ்க, வாழ்க, வாழ்க என்று தங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளோடு உங்களை வணங்கி மகிழும்


உங்கள் அன்பின் அங்கம்


அரிமா முனைவர் த.கு.திவாகரன்


No comments:

Post a Comment