கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜோதிமணி ஒரு விடுதலை சந்தாவையும், மோகன்தாஸ் காந்தி - சுசீலா ஆகியோர் ஒரு விடுதலை சந்தா, ஒரு உண்மை சந்தாவையும், மோனிகா ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர் த.த.கார்த்தி பகுத்தறிவாளர் கரூர் கண்ணதாசன், தமிழழகன் ஒரு விடுதலை சந்தாவையும், வேடசந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் வீரா. சாமிநாதன், தி.கூடலூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர். கண்ணன் ஒரு விடுதலை சந்தாவையும், வழக்குரைஞர் ஆர். குடியரசு 5 விடுதலை சந்தா வழங்குவதாக தெரிவித்து முதல் கட்டமாக ஒரு விடுதலை சந்தாவையும், கரூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி விடுதலை சந்தாவையும் மாவட்ட தலைவர் ஆசிரியர் பா. குமாரசாமி, ஈட்டி கணேசன் ஆகியோரிடம் வழங்கினர்.
ஒசூர் அசோக் லைலேண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் தோழர்கள் கார்த்திக், இந்திரஜித் ஆகியோர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் முன்னிலையில் தலா ஒரு விடுதலை சந்தா வழங்கி இயக்கத்தில் இணைந்தனர். அவர்களுக்கு மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர் பாண்டி, மாவட்ட செயளாலர் மா.சின்னசாமி, ஓட்டுநர் பிரபாகரன் ஆகியோர் இருந்தனர்.
தருமபுரி மாவட்டம் தமிழ் ஆசிரியர் எம். பழனிச்சாமி வார்டன் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமனிடம் ஒரு விடுதலை சந்தாவை வழங்கினார். உடன்: மாவட்ட தலைவர் சிவாஜி மாவட்ட செயலாளர் இளைய மாதன், தர்மபுரி பெரியார் விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ்.
No comments:
Post a Comment