மேனாள் பிரதமர் வி.பி. சிங்
மண்டல் அமலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல; அதிகார வர்க்கத்தில் நமக்குரிய பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், சாதாரணமான ஏழை மக்க ளுக்கான ரேசன் கார்டு கிடைப்பதைக் கூட முடிவெடுப்பது அதிகார வர்க்கம்தான். எனவேதான், மண்டல் அமலாக்கம் என்பது அதிகாரப் பங்கீடு என்கிறோம். எனவே, திராவிடர் கழகத்தை எங்களோடு ஒப்பிட மாட்டேன். ஏனென்றால், அது அரசியலிலே ஈடுபடக்கூடிய இயக்கமல்ல. ஆனால், அர சியலில் ஈடுபடுகின்ற கட்சிகளில், எங்க ளுடைய ஜனதா தளம்தான் கட்சிப் பொறுப் புகளில் 60 சதவிகித்தை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதே போல நாட்டின் அனைத்து அதிகார மட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டாலொழிய, நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. வீரமணி அவர்களே! உங்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், இங்கே இருக்கக் கூடிய மக்களுக்கு கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எதன் மூலமாக இந்தச் சமுதாயத்தை உயர்த்த முடியுமோ, அந்த மூலத்தைத் தொட்டு, அந்த அடித்தளத்தைத் தொட்டு, பணி யாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உங்களுடன் பணியாற்றக் கூடியவர்களும் ஓர் அடித்தளமான பணியைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஏனென்று சொன்னால், புரட்சி என்பதை வாளைத் தூக்கிக்கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச் சியை வைத்துத்தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை - நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை - நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, உங்களைப் பாராட்டுகிறோம். அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பஸ்வானிட மிருந்து நான் உணர்ச் சியைப் பெறுகிறேன். அதே போல், சமுதாயப் பணியிலே, நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சி யைப் பெறுகிறேன்.
- 23.12.1992 நாகம்மையார் குழந்தைகள் காப்பகக் கட்டடத்தைத்
திறந்து வைத்துஆற்றிய உரையிலிருந்து ('விடுதலை', 30.12.1992)
No comments:
Post a Comment