மானமிகு தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்களுக்கு,
தாங்கள் காணொலி வாயிலாக அளித்த என் 80வது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியைப் பார்த்து, கேட்டு மிக மகிழ்ந்தேன், என் வாழ் விணையர், இன்னும் காணொலி மூலம், தம்பிகள் அவர்தம் வாழ் விணையர்கள், எங்களது மக்கட்செல்வங்கள், பேரக் குழந்தைகள், மற்றும் சுற்றமும் நட்புமாய்க் கலந்துகொண்ட தோழர்கள் கண்டடைந்த மகிழ்ச்சி அளவற்றது.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளை நினை வூட்டியது மேலும் உழைக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
பெரியார் பெருந்தொண்டர்கள் சித்தப்பா பி.வே. இராமச் சந்திரன், ஆளவந்தார், சச்சிதானந்தம், இராதாகிருஷ்ணன், தருமராஜ் இவர்களுக்கு ரயில்வே அலுவலகங்களில் வேலை பார்த்ததைவிட திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியாருடன் தினம் பழகும், கழகப்பணிமேற்கொண்டு உழைக்கும் நேரமே மனநிறைவு தந்தது. அந்த இனிய நாட்கள் அடிக்கடி நினவுக்கு வரும்.
வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கும் தோழர்களுக்கும் ஓய்வறியாது உழைக்கும் தாங்கள் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு மிகவும் நன்றி.
இன்னும் சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்று கொடுமைகளை அனுபவித்த அந்த வணக்கத்திற்குரிய தோழர்களைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு நினைவாற்றலையும் அவர்கள்பால் கொண்ட அன்பையும் என்றும் போற்றுகிறோம்.
அம்மா அவர்களின் உடல் நலமும் தங்களது உடல் நலமும் பேணிக்காக்க வேண்டுகிறோம். மானமிகு தோழர் அன்புராஜுக்கும் அவர்தம் வாழ்விணையரும் நலமுடன் வாழ எங்கள் வாழ்த்துகள்.
தங்களுடன் இருந்து நம் மக்களின் உயர்விற்கு பாடுபட இயலவில்லையே என்ற ஏக்கம் இன்றும் உள்ளது.
என்றும் தங்கள் அன்புத்தொண்டர்கள்,
- சோம வேலாயுதம்,
கலைச்செல்வி வேலாயுதம்
No comments:
Post a Comment