மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஆர்.டி.சபாபதிமோகன் சிறப்புரை
வல்லம், டிச. 6- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர் நிலைப் பல் கலைக்கழகம்) பல்கலைக்கழகத்தை நிறுவிய வேந்தர் கி.வீரமணி அவர் களின் பிறந்தநாள் ‘நிறுவனர் நாள்’ விழாவாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழ கத்தின் மேனாள் துணைவேந்தர் ஆர்.டி.சபாபதி மோகன் சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர்தம் உரையில், வேந்தரின் பெரியாரியல் பயணத்தை விவரித்தார். வேந்தரின் தொடக்கக்கல்வி, உயர் நிலைப்பள்ளியில் திருக்குறளைச் சொல்லி உதவித்தொகை பெற்றது. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது மூன்று முதல் பரிசுகளையும் பெற்று சாதனை மாணவராக திகழ்ந்ததைக் குறிப்பிட்டு, மாணவர்களும் அவ ரைப் போல உயர வேண்டும் பல் கலைக்கழகத்திற்குப் பெருமையும் சேர்க்க வேண்டும் என்றார். சமூக நீதியை நிலைநாட்டிட தமிழர் தலை வர் டாக்டர்.கி.வீரமணி உழைத்த உழைப்பை, ‘விடுதலை’ இதழினை நடத்திய திறத்தை, பெரியாருக்கு உற்ற துணையாகத் திகழ்ந்ததை எடுத் துரைத்தார்.
மின்னணுப் பொறியியல்துறை, மின்னணுவியல் பொறியியல்துறை இணைந்து நடத்திய இவ்விழாவிற்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி தலைமை வகித்தார்.
துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி உரையில் வேந்தரின் சிறப்புகளைப் பட்டியலிட்டார், பல் கலைக்கழகம் பெற்ற விருதுகளை எடுத்துரைத்தார்.
இணை துணைவேந்தர் பேராசி ரியர் எஸ்.தேவதாஸ் தொடக்க உரை யில் தந்தை பெரியாரால் இந்திய அரசமைப்புச் சட்டம் முதல் திருத்தம் பெற்றதை விளக்கினார். வேந்தர் கி.வீரமணி அவர்களின் திறத்தினை, செயல்பாட்டினை எடுத்துரைத்து அமெரிக்க நாட்டில் வழங்கிய விருதி னையும் குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார்.
உயிரி தொழில்நுட்பவியல் துறை மூன்றாமாண்டு மாணவி ஆ.சோபியா வரவேற்புரை நிகழ்த்த, பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர் நம்.சீனிவாசன் நன்றி யுரை வழங்கினார்.
நிகழ்ச்சியினை உயிரி தொழில்நுட் பவியல் துறை மூன்றாமாண்டு மாணவி க.பிரியங்கா தொகுத்து வழங்கினார்.
‘நிறுவனர் நாள்’ விழாவினை முன் னிட்டு நிர்வாகக் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மொத்த 1,037 மாணவர்களுக்கு வழங் கப்பட்ட தொகை ரூபாய் ஒரு கோடியே அறுபத்து ஏழு லட்சத்து முப்பத்தேழாயிரம் (ரூ. 1,67,37,000) ஆகும். இதில் 105 மாணவர்கள் கரோனா நோய் பிரிவின் கீழ் 91 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெறுபவர்களை இணை துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தேவதாஸ் அறிவித்தார்.
தமிழ்நாடு பவுண்டேசன் ஸ்காலர் ஷிப் தொகை ஒரு லட்சத்தினை ஜான்சிராணி, அப்துல்மஜித், பாலாஜி, மிலோசனா, பவித்ரா ஆகிய அய்ந்து பேர் பெற்றனர்.
நிறுவனர் நாள் விழாவில் பல் கலைக்கழகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு துணை வேந்தர் செ.வேலுசாமி மாலை அணி வித்தார். விழாவில் இணை துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.தேவதாஸ், கல்விப்புல முதன்மையர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நிறுவனர் நாளை முன்னிட்டு பல் கலைக்கழக துணைவேந்தர் மாண வர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார். இணைதுணை வேந்தர், முதன்மையர்கள் மற்றும் பேராசிரி யர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment