அறிவு ஆசான் தந்தை பெரியார், உடல் நலம் பாதிக்கப் பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந் தார்கள். இரு தினங்களாக அய்யா மூர்ச்சை யுற்ற நிலையிலேயே இருந்தார்கள்.
1973ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் இரவு அன்னை மணியம்மையாரும் மற்றும் பலரும் அய்யாவைப் பார்த்த படியே நின்றிருந்தார்கள். பொதுச்செயலாளர் வீரமணி அவர்கள், அப்பொழுதுதான் தொலைபேசி அழைப்பை ஏற்று வெளியே சென்றிருந்தார்கள். சிறிது நேரத்தில் அய்யா வின் முகத்தில் சலனம் ஏற்பட்டது. அனைவரும் அய்யா கண் விழிக்கப் போகிறார். பேசப் போகிறார் என்று ஆர்வத்துடன் பார்த்தனர்.
அய்யா திடீரென்று வீரமணி! என்று பலமாக அழைத் தார்கள். அவ்வளவுதான் அதன் பிறகு மீண்டும் மூர்ச்சையுற்ற நிலை தொடர்ந்தது. மறுநாள் காலை அய்யா முடிவெய்தினார் கள். இறுதி மூச்சு அடங்கும் நிலையிலேகூட அய்யாவின் உள் மனத்தில் இன்றைய தமிழர் தலைவர் வீரமணிதான் இடம் பெற்றிருந்தார் என்பதை இந்நிகழ்ச்சி உணர்த்தியது.
(அன்று வேலூர் மருத்துவமனையில் உடனிருந்த
பேராசிரியர் இறையனார் கூறியது.)
No comments:
Post a Comment