த.சீ. இளந்திரையன்
மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்
திராவிடர் கழகம் . மூட நம்பிக்கையின் முடை நாற்றமும், மதவாத பழமை கருத்துக்களும் மண்டிக்கிடந்த தமிழ்ச் சமுதாயத்தில் ஒளியேற்றும் சூரியனாய் ஈரோட்டில் உதித்து பகுத்தறிவு, சமூக சீர்திருத்தம், சமூக நீதி, கடவுள் - மத மறுப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, கைம் பெண்மண ஆதரவு, சுரண்டல் ஒழிப்பு, ஆண்டான் அடிமை முறை எதிர்ப்பு என இம்மக்களின் மேன்மைக்காக இயக்கம் கட்டி தந்தை பெரியார் பெருஞ்சமர் புரிந்தது போலவே, 19 ஆம் நூற்றாண்டில் சார்லஸ் பிராட்லா, இராபர்ட் கிரீன் இங்கர் சால், பெட்ரண்ட் ரஸ்ஸல், பெஞ்சமின் பிராங்கி ளின், நாராயணகுரு, எம்.என்.ராய் போன்ற பல்வேறு சமூக சீர்திருத்தத் தலை வர்களும், ஆரிய சமாஜம், பிரம்மசமாஜம் போன்ற அமைப்புகளும் போராடின. ஆனால், அவை திராவிடர் கழகம் போல் மலர வில்லை. பெரியாரின் மறைவுக்குப் பின்னால், ஆசிரியர் அவர்கள் வழி நடத் துவது போல் தலைவர்கள் உருவாகவில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனச்சான்றின் பேரில் உறுதி கூறுகி றேன் எனும் சொற்றொடர் வழங்கிய பிராட்லா:
சார்லஸ் பிராட்லா இலண்டனிலுள்ள ஹாக்ஸ்டன் எனும் ஊரில் 1833 ஆம் ஆண்டு பிறந்தார். கடவுள் மறுப்பாளரான சார்லஸ் பிராட்லா 1858 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் லண்டன் மதச்சார்பற்ற சங்கத்தின் தலைவரானார். மத எதிர்ப்பாள ராக, சிறந்த தொழிற்சங்கவாதியாக, பெண் உரிமைக்காக போராடிய சார்லஸ் பிராட்லா வின் கருத்துக்கு மக்களிடையே ஆதரவும் - வரவேற்பும் பெருகியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சார்லஸ் பிராட்லா 1880 ஆம் ஆண்டு இங்கிலாந்து நார்த்ஹாம்டன் நாடாளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். கடவுள், மத எதிர்ப்பாளராக விளங்கிய பிராட்லா கடவுளின் பெயரால் உறுதியேற்கிறேன் எனக் கூறி பொறுப் பேற்கும் வாசகத்தை உச்சரிக்க மாட்டேன் என மறுத்தார். மனச்சான்றின் படி உறுதி கூறுகிறேன் என உறுதிச்சான்று திருத்தப்பட வேண்டும் என முழங்கினார். இதனால் இரண்டு முறை பதவி பறிக்கப்பட்டு மூன்றா வது முறையும் அதே தொகுதியில் நின்று மக்களின் பெருத்த ஆதரவோடு வெற்றி பெற்று மனச்சான்றின் பெயரில் உறுதி கூறுகிறேன் என உறுதி ஏற்றார். இன்று, திமுக போன்ற முற்போக்கு சக்திகள் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பதவி யேற்கும்போது உளமாற உறுதி கூறுகிறேன் என கூறுவதற்கு சார்லஸ் பிராட்லா தான் காரணம். இத்தகைய சிறப்புக்குரிய தலை வராக விளங்கிய சார்லஸ் பிராட்லா அவர் களின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சங்கம் முனைப்புடன் செயல்பட வில்லை. காரணம், அவருக்குப் பின்னால் அச்சங் கத்தை நடத்துவதற்கு வீரியமான தலைவர் இல்லாததேயாகும்.
மனிதனை வெறுப்பதும் கடவுளை நேசிப்பதும் மதங்களின் வேடிக்கையான கொள்கை:
இராபர்ட் கிரீன் இங்கர்சால் நியூயார்க் டிரெஸ்ட்டனில் 1833 ஆம் ஆண்டு பிறந் தவர் இங்கர்சால் என பரவலாக அறியப் பட்ட இராபர்ட் கிரீன் இங்கர்சால் ஆற்றல் மிக்க பகுத்தறிவு பேச்சாளராக விளங்கினார். ஒரு சக்கரம் சுழல வில்லையானால் மெக் கானிக் உடனே முழந்தாளிட்டு கர்த்தரை நோக்கி ஜெபம் செய்ய மாட்டான். என்ன கோளாறு என்று பார்த்து தன் கருவிகளைக் கொண்டு சரி செய்வான் என்று கூறியவர் இங்கர்சால். கிருத்துவ மதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஞானஸ்னானம் செய்ய வேண்டியது கடமை. ஆனால் இங்கர் சாலோ ஞானஸ்னானத்தை விட சோப் ஸ்னானம் சிறந்தது என்றார். நம் கலாச்சாரம் வானத்திலிருந்து இறங்கியது இல்லை. அறிவியலுக்கும் மதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை அவை ஒன்றுக்கொன்று எதிரானவை என்றார். கிறித்துவ தேவால யங்களிடம் தான் சொர்க்க நரகத்தின் திறவு கோல் இருப்பதுபோல அவர்கள் நடந்து கொள்வதும், மத நம்பிக்கைகளை மறுப்ப வர்களை பாவிகளாக பார்ப்பதையும், மதத் திலிருந்தே அவர்களை ஒதுக்கி வைத்தால் இந்த உலகமே வெறுப்பாலும் வேதனை யாலும் நிறையும்.மனிதனை வெறுப்பதும் கடவுளை நேசிப்பதும் மதங்களின் வேடிக் கையான கொள்கைகளாக இருக்கின்றன என்றார். இவ்வாறு புரட்சிகர கருத்துகளை பேசிய இங்கர்சாலை சிறப்பிக்கும் வகை யில் அவர் வாழ்ந்த ரெட் லெட்டர் என்ற ஊரின் பெயர் இங்கர்சால் என மாற்றப் பட்டது. ஆனாலும், அவர் கொள்கைகள் அமெரிக்கர்கள் மத்தியில் பரவ இல்லை ஏனெனில் அவர் அமைப்பாக உருவாக்க வில்லை.
இடதுசாரி இயக்க இளைஞர்களின் நாயகன் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் :
1872 ஆம் ஆண்டு பிறந்த பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் நான் ஏன் கிருத்துவ நல்ல என்ற நூலை எழுதியவர். காலனி ஆதிக்கத்தை எதிர்த்தவர். ஹிட்லருக்கு எதிராக பரப்புரை செய்தவர். சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்தை எதிர்த்தவர். முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்பு செயல்களால் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டவர். புதிய இடதுசாரி இயக்க இளைஞர்களுக்கு நாயகனாக இருந்தவர். போற்றத்தக்க சமூக மாற்றங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப் பணித்துக் கொண்ட பெர்ட்ரண்ட் ரஸலின் மறைவுக்குப் பின் அவரது கருத்துகள் பரப்பப்பட வில்லை. ஏனெனில் அவருக்கு இயக்கம் இல்லை. கடவுள் - மதப் பற்று இல்லாமல் மானுடப் பற்றை பேசிய ஜான் ஸ்டூவர்ட் மில்: 1806 ஆம் ஆண்டு பிறந்த ஜான் ஸ்டூவர்ட் மில் அரசியல் தத்துவ ஞானியாகவும், பொருளாதார நிபுணராக வும் விளங்கியவர். ரசலின் ஞானத் தந்தை யாக இருந்து அவரை வளர்த்த பெருமை குரியவர். பெண்ணுரிமை, சுதந்திரம் ஆகிய சிறப்பான நூல்களை உலகுக்கு தந்தவர். கடவுள் மதம் இல்லாத மானுடப்பற்று பற்றி பேசியும் எழுதியும் பரப்புரை செய்தவர். ஆனால், இக்கருத்துகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவரது கருத்தை கொண்டு செல்வதற்கு இயக்கமும் இல்லை என்பதே வேதனை.
கடவுள் நம்பிக்கையற்ற பெஞ்சமின் ஃபிராங்கிளின் :
இடிதாங்கி, வெள்ளெழுத்து கண்ணாடி, ஆறு மோனிகா இசைக்கருவி, நீச்சல் காலணி என புதிய புதிய கண்டுபிடிப்புகளை மானுட சமூகத்துக்கு வழங்கிய மாபெரும் அறிஞரான பெஞ்சமின் பிராங்கிளின் கடவுள் நம்பிக்கை அற்றவராவார். பிராங்க் ளினுக்கு பெருமை சேர்க்கும் வகையில் டாலர்களில் ஃபிராங்க்ளின் படத்தை பொறித்த அமெரிக்க அரசு, அவரின் கொள்கைக்கு நேர் எதிராக “நாங்கள் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்“ என்று ரூபாய் நோட்டில் அச்சடித்துக் கொண்டிருக்கின்றது. இதை கண்டிக்க பெஞ்சமின் ஃபிராங்கிளினும் இல்லை.அவ ரது லட்சியங்களை பேசும் அமைப்புகளும் இல்லை.
இது போலவே, 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும் பல சமூக சீர்திருத்த இயக் கங்களின் மலர்ச்சி பெற்றன. குறிப்பாக, ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பஞ்சாபில் ஜாதி ஒழிப்பு இயக்கமான ஜடாபட் தோடக் மண்டல், எம்.என்.ராய் உருவாக்கிய மாந்த நேய இயக்கம், நாராயணகுரு இயக்கம். ஆந்திராவில் வீரேசலிங்கம் நிறுவிய சமூக சீர்திருத்த சங்கம் , மராட்டிய சத்திய சோதக் சமாஜ் போன்ற பல்வேறு அமைப்புகள் காலவெள்ளத்தில் கரைந்து போயின. சமூக சீர்திருத்தம் பேசிய நாராயணகுருவின் இயக்கம் அவருக்கு பின்னால் பக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் தத்துவத்தை தொடர முடியாத தலைவர்களே ஆவர்.
இணைக்காமல் - கலைக்காமல் இயக்கும்
ஈடு இணையற்ற தலைவர் ஆசிரியர்:
1973 டிசம்பர் 24 பகுத்தறிவு உலகை காரிருள் சூழ்ந்தது. ஆரிய சூழ்ச்சியை அழித்தொழித்த அழிவு சூரியனாம் பெரியார் மறைந்தார். மகிழ்ச்சி கொண்ட மனங்கள் இனி பெரியார் இயக்கம் இருக் காது. இருந்தாலும் இயங்காது என மகிழ்ந்து கூத்தாடினர். ஆனாலும் அவர் மறைவுக்கு பின்னாலே அன்னை மணியம்மையார் தலைமையில் இந்த இயக்கம் அதே வீரியத்தோடு நடைபெற்றது. ராவண லீலா நிகழ்வு நடத்தி இந்தியத் துணைக்கண் டத்தையே உலுக்கிய பெருமை அன்னை மணியம்மையாரையே சேரும். ஆனால், அவரும் நம்மோடு இல்லை தலைமைப் பொறுப்பேற்ற 5 ஆண்டுகளிலேயே அன் னையாரையும் இழந்தது இயக்கமும் - இனமும். எதிரிகளும் ,துரோகிகளும் இனி இயக்கம் நடக்காது என்று எண்ணியிருந்த நேரத்தில், தந்தை பெரியாரால் அடையா ளம் காட்டப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் நாடெங்கும் சுற்றி சுழன்றடித் தார். ஆரிய இருளை அகற்ற சமரசம் இல்லாமல் சமராடி வருகிறார். சமூகநீதிக் கொடி சாயாமல் சரித்திரம் படைத்தார். தமிழர் தளபதியாக, தமிழினக் காவலராக, தமிழர் தலைவராக மக்கள் மனங்களில் மலர்ந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கு சமூகநீதி சரித்திரம் கூறும் மூத்தத் தலை வராக வலம் வருகிறார். பெரியாரியலை வீரியம் குன்றாமல் நடாத்திச் செல்லும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நீட் நுழைவுத் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இந்தி - சமற்கிருத திணிப்பு ஆகியவற்றி கொடுமைகளை விளக்கி அவற்றுக்கு எதிராக முன் வரிசையில் நின்று படை திரட்டுகிறார். இக்கொடிய கரோனா எனும் பெருந்தொற்று காலத்திலும் ஆரிய வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க இணைய வழியாக பெரியாரியல் எனும் அருமருந்தை வழங்கிக் கொண்டிருக்கிறார். பெரியாரை உலகமயமாக்கும் ஒப்பற்றப் பணியைச் செய்யும் திராவிடப்பேரினத்து பெரு மகனார் ஆசிரியர் அய்யா வாழ்க, தமிழ்ச் சமூகம் மானமுடன் வாழ...
No comments:
Post a Comment