ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 6, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:



  • மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் சார்பில் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்ற விவசாய அமைப்புகள், எதுவும் பேசாமல், கையில் கோரிக்கை அட்டையுடன் அமைதியாக அமர்ந்திருந்தனர். சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதற்கு  ஆம் அல்லது இல்லை என்பதை அரசு தெளிவாக சொல்ல வேண்டும் என்று அந்த அட்டையில் எழுதப்பட்டு இருந்தது. மீண்டும் வருகிற 9ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

  • இந்தியர்கள் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் தனி மனித வழிபாடு உள்ளது. ஆனால் தற்போது மோடியின் கவர்ச்சி இறங்குமுகத்தில் உள்ளது. விவசாயிகளின் தன்னெழுச்சி இதற்கு சான்று என சட்ட வல்லுநர் ஏ.ஜி. நூரானி தனது கட்டுரை யில் தெரிவித்துள்ளார்.

  • மேகாலாயா மாநிலத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சர்ச்சுக்கு செல்லும் ஹிந்துக்களைத் தாக்குவோம் என வி.எச்.பி. அமைப்பு எச்சரித்துள்ளது.

  • கனடா பிரதமரைத் தொடர்ந்து, அமைதியான முறையில் விவசாயிகள் போராட உரிமை உள்ளது என அய்க்கிய நாடுகள் சபையும் தெரிவித்துள்ளது.

  • டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய பிரதேச விவசாயிகளும் போராட்டத்தில் பங் கேற்க உள்ளார்கள்.

  • விவசாயிகள் பிரச்சினையில் சுமுகமாக தீர்த்திட இந்திய அரசிடம் பிரிட்டன் வற்புறுத்திட அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை.

  • மத்திய அரசின் அழைப்பின் பேரில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், உணவு, தேநீர் என அனைத்தையும் தங்களுடன் எடுத்து வந் தனர். அரசு தரும் உணவு மற்றும் தேநீர் வாங்கிட மறுத்தனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • அரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசில் துணை முதல்வராக இருக்கும் துஷ்யந்த் சவுதாலா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜேந்திர சிங் ஆகியோர், வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பதால், அவர்களை முற்றிலுமாக புறக்கணிக்க அவர்களின் சமூக அமைப்புகள் அறிக்கை விடுத்துள்ளன.

  • கேரளாவில் உருவாக்கப்பட உள்ள ராஜீவ் காந்தி பயோ டெக்னாலஜி கழகத்தின் இரண்டாவது வளாகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை, கோல்வால்கர் பெயரைச் சூட்டுவதற்கு கேரள அரசும், காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

  • உ.பி. அரசு நிறைவேற்றியுள்ள திருமணத்திற்கு மதம் மாறும் தடைச் சட்டம் (லவ் ஜிகாத் சட்டம்) அரசமைப்புச் சட்டத் திற்கு எதிரானது. உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டம் தகர்க்கப்பட்டு விடும் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • உ.பி. வாரனாசியில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்த லில் இரண்டு இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.


தி டெலிகிராப்:



  • விவசாயிகளின் போராட்டத்தில், பாடுவது, ஆடுவது, குடிப்பது இவை தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர், காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பிரச்சினையில் நாம் போராடுகிறோம் என்பதை அனைவரும் உணரவேண்டும் எனவும் விவசாய அமைப்புகள் தெளிவுபடுத்தி வருகின்றன.


குடந்தை கருணா


6.12.2020


No comments:

Post a Comment