கி.வீரமணி
சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தோட்டத்தை அடுத்து அமைந்த கருமான் ஊது உலையில் இரும்பைப் பழுக்கக் காய்ச்சி அடிக்கிற முறையை வியப்போடு மூக்கில் விரலை வைத்துப் பார்த்துப் பழக்கமானவன் நான்.
எங்கள் ஊரில் எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு பாட நூல்களோடு, இயக்கப் பாடங்களையும் கற்றுக் கொடுத்து, பாசறை வீரர்களைப் பக்குவப்படுத்துவது போல மாணவர்களான எங்களைத் தயாரித்தார்!
கூட்ட ஏற்பாடுகளை எல்லாம் நாங்களே செய்வோம் - மேடை (பெஞ்சு, நாற்காலிதானே) போடுவது, துண்டறிக்கை (1 ஜ் 32 அளவு) பிட் நோட்டீஸ் அச்சடிப்பது (வள்ளலார் அச்சகம் என்று அவ்வச்சகத்திற்குப் பெயர்) எல்லாம். வசூலித்த பணத்திலிருந்து செலவு. புலி, வில், கயல் பொறித்த தமிழ்க் கொடி ஒருபுறம்; மற்றொரு புறம் சிவப்புத் துணியில் வெள்ளை எழுத்து (தையலில் இடம் பெற்றிருக்கும்) தராசு சின்னம் உள்ள கொடிகளைப் பிடித்து, 10, 20 பையன்கள் முழக்கமிட்டுக் கொண்டே செல்லச் செல்ல உடன் வருபவர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வரும். முக்கியப் பேச்சாளர்கள் ரயிலில் வரும்போது வரவேற்போம் - வழியனுப்புவோம் - ஜட்கா வண்டியில் ‘ராமலிங்க பக்த ஜனசபை’ (கடலூர் ஓ.டி.) இடத்திற்கு அழைத்து வந்து தங்க வைப்போம்; உணவு வசதிகள் செய்வோம்; ‘பகவதி விலாஸ்’ என்று ஒரு மிலிட்டரி ஓட்டல். அங்கே அழைத்துப் போய் சாப்பிட வைப்போம் அல்லது எடுப்புச் சாப்பாடு கொண்டு வந்து பரிமாறுவோம். பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் இரா.நெடுஞ்செழியன் போன்ற அண்ணாமலைப் பல்கலைக் கழக அந்நாள் மாணவர்கள்; காஞ்சி கல்யாண சுந்தரம் - புதுவை ‘தொழிலாளர் மித்ரன்’ ஆசிரியர் போன்றோர் வந்து உரையாற்றுவார்கள். பேருந்தில் 50 காசு (எட்டணா), ரயில் டிக்கெட் (2 ரூபாய்) மொத்த வழிச் செலவு இவ்வளவுதான்.
ஊர்வலம் புறப்பட்ட பின், மைதானத்திற்குச் செல்லுவோம்; முதலில் மேடைமீது ஏறி பாடுவோம்; கூட்டம் சேரும்; எங்கள் ஆசிரியர் எப்போதும் பின்னணி யில்தான் இருப்பார்; ‘‘என்னப்பா, என்னப்பா’’ என்பார்.
‘‘எல்லாம் சரியாக உள்ளது சார்’’ என்போம்; அவருக்குத் திருப்தி!
மா.பீட்டர் பி.ஏ., வயதானவர், மாவட்ட கலெக்டர் ஆபீசில் அந்நாளில் பெரிய அதிகாரியாக இருந்தார்; ஒரு பார்ப்பன மேலதிகாரி இவரை மரியாதைக் குறைவாக நடத்தினார். அதை எதிர்த்துப் பேசிய, மா.பீட்டரைப் பார்த்து ‘‘உன்னைப் பதவியிலிருந்து நீக்குவேன்’’ என்று அந்தப் பூணூல் மேலதிகாரி கூறியுள்ளார்.
“நீங்க என்னங்க என்னை சஸ்பெண்ட் பண்றது? நானே ராஜினாமா செய்துவிட்டு, நாளை, ஹேர் கட்டிங் சலூன் வைத்துக்கூட பிழைத்துக் கொள்வேன். ஆனால், நீ போனால் உஞ்ச விருத்தி, தர்ப்பணம் கொடுக்கும் ஆளைத் தேடித்தான் போகவேண்டும்‘’ என்று விரைந்து கூறி, ராஜினாமா கடிதத்தை வீசி எறிந்துவிட்டு, அதேபோல், கடைவீதியில் ஒரு சலூன் திறந்து, சம்பளத்திற்கு சில முடி திருத்தும் நண்பர்களை வேலைக்கு அமர்த்தி, சில காலம் கடை நடத்தி வந்தார். சில மாதங்கள் கழித்து அந்தப் பூணூல் அதிகாரி கடைக்கே வந்து, மன்னிப்புக் கேட்டார்.
அதிலிருந்து இவர் ‘சுதந்திரமான பெரியாரிஸ்ட்’ - சுயமரியாதை இயக்கத்தவர் - திருப்பாதிரிபுலியூரில் இவரது குடும்பம் - நடுத்தர வசதியுடையது; அவரது துணைவியார் பி.ஏ., லிட்., ஆசிரியை. அவர் கழக வேலைக்கே தன்னை ஒப்படைத்துக் கொண்டு, ஆ.திராவிடமணி அவர்களுக்கு மிகப்பெரிய துணையாய் இருந்தவர். அவர் ஆஸ்தான தலைவர் - அவர் இல்லாவிட்டால் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் தலைவராக இருப்பார்கள். ஒருமுறை என்னையே தலைவராக பிரேரேபித்து அமர வைத்தார் - ஒரு கூட்டத்தில் - எங்கள் ஆசிரியர்.
கூட்டம் நடக்கும்போது கற்கள் வந்து விழும். முக்கிய பேச்சாளர் பேசும்போது, சில ஊர்களில் காங்கிரஸ் நண்பர்கள் நேரிடையாகவே வந்து ‘கேள்வி கேட்டு’ கலாட்டா - ரகளை செய் வார்கள். நமது தோழர் களும் பொது மக்களும் பேச்சாளருக்கு ஆதரவு தருவர்!
தொடர்ந்து கூட்டம் நடைபெறும் - இடையே நிறுத்துவது கிடையாது. நாங்கள் கலங்கியதே இல்லை - வீரமும், துணிச் சலும் தானே ஏற்படும் சூழ்நிலை - கொல்லன் உலைக் களத்தில் காய்ச்சி அடிக்கப் பட்டது போல!
1944 ஜூலை 29 தென் னார்க்காடு திராவிடர் மாநாடு (சேலம் மாநாட் டிற்கு சில மாதங்கள் முன்பு). அதில் அய்யா பெரியார் பேசும்போது குறுக்கிட்டு, ‘ஏ, இராமசாமி, பேசாதே’ - என்று கூச்சல் வந்தது - (அந்த தியேட்டர் ஓனரின் மருமகன் காங்கிரஸ் இளைஞன்). அதைக் கண்டு மற்றவர் பாய்வ தற்கு முன் - பெரியார் அதை அடக்கி அமைதியாகப் பதில் கூறி, ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் பேசியது என்னை பிஞ்சுப் பருவத்தில் மெய்சிலிர்க்க வைத்தது.
மாநாட்டிற்கு முதல் நாள் எனது ஆசிரியர் திராவிடமணி - ஓ.டி.யிலிருந்து எப்போதும் சைக்கிளில்தான் அலுவலகம் (என்.டி) செல்வார். அவரை காலிகள் வழிமறித்து அடித்தனர் - நெருப்புக் கட்டையால் சுட முயற்சி செய்தது கேட்டு, கழக இளைஞர்கள் திரண்டனர்; ஓ.டி.யில் ஏராளமான திராவிட இளைஞர்கள் தயாராகிவிட்டோம்.
மாநாடு - மாலையில் - மஞ்சை நகர் மைதானத்தில்! அடைமழையால் பெரியார் பேச்சு தடைப்பட்டது. ரிக்ஷாவில் திரும்பியபோது செருப்பு வீச்சு - பாம்பு வீச்சு எல்லாம் நேரில் பார்த்தும், கேட்டும், உரமேறிய நிலை என்னை வளர்த்தது!
புதுச்சேரியில் மாநாடு - ஒதியஞ்சாலை திடலில் - அன்று கலைஞர் அவர்களை நாடக நடிகராக அடையாளம் கண்டு காங்கிரஸ்காரர்கள் தாக்கியபோது - சற்று தள்ளி நின்று கொண்டிருந்தேன். எதற்குத் தாக்குகிறார்கள் என்பதே புரியாத நிலை - சற்று நேரத்திற்கு!
இப்படி எதிர்ப்பு என்ற புழுதிக் குப்பை - வீசியது! அது

இப்படி எதிர்ப்பு என்ற புழுதிக் குப்பை - வீசியது! அது உரமாகி நம் வயலின் செடி மரமானது - காய்த்தது - கனிந்தது! நம் போன்றவர்களின் நெஞ்சில் உரமேற்றியது!
கொலை முயற்சிகள்!
கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் திராவிட மாணவர் பிரச்சாரத்திற்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம் என்றும் மறக்க முடியாத பாடம் ஆகும்!
இயக்கப் பொறுப்பேற்றபின் 1982இல் பழைய முகவை மாவட்டம் மம்சாபுரத்தில் மருத்துவமனை திறந்து வைக்கச் சென்றபோது அன்றைய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் புதுப்பட்டி கூட்டுச் சாலையில் வரவேற்பு தருவதைப் போல வழிமறித்துத் தாக்கப்பட்டேன். வணிக நிறுவனம் தொடங்கி வைத்து முதல் வியாபாரத்தைத் தொடங்கி வைப்பதுண்டு. நானோ திறக்கப் போன மருத்துவமனைக்கு மூக்கிலும் தோளிலும் இரத்தம் சொட்ட சொட்ட சென்று முதல் நோயாளியாகவும் ஆனேன். யாருக்கும் கிட்டாத அரிய வாய்ப்புதான். ஆனா லும், எந்த நிகழ்ச்சியும் தடைப்படவில்லை. மருத்துவமனை திறப்பும், அதைத் தொடர்ந்து ராஜபாளையம் பெரியார் படிப்பகம் திறப்பு விழாவும் நடைபெற்று முடிந்தன. பேசிய பின்தான் தொடர் சிகிச்சைக்குச் சென்றேன்.
அதேபோலவே கிருஷ்ணகிரி அருகே கல்லாவியில் நடைபெற்ற பொதுக்கூட்டமா ஆனாலும், புதுவண்ணாரப் பேட்டை சர்.பிட்டி தியாகராயர் நினைவு நாள் நிகழ்ச்சிக்குச் சென்ற போது உயிருக்குக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா ஆனாலும், அனைத்தையும் எதிர் கொண்டு தான் இயக்கம் வளர்ந்திருக்கிறது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 1987 ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்றபோது ஹிந்துத்துவ ரவுடிக் கும்பல் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியது. காரை பின்னோக்கிச் செலுத்தி, காவல் நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு, திட்டமிட்டபடி பொதுக் கூட்டத்தை நடத்தி, இரவு மணி 11.30 வரை பேசிவிட்டுதான் முடித்தோம்.
அதே கால கட்டத்தில் அதிராம்பட்டினத்தில் கழக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டு மேடையைக் கூட உடைத்து விட்டனர். திரும்பிவிடலாம் என்று சிலர் தயங்கிய நிலையிலும், கூட்டம் நடந்தே ஆக வேண்டும், என்பதில் நாம் உறுதியாக இருந்து மீண்டும் - ஒலிபெருக்கி, மேடை, ஏற்பாடு செய்து - பெரும் எழுச்சியாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிவிட்டுத்தான் திரும்பினோம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்ற போது நம் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. அதை கடந்து மாநாடு எழுச்சியாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு (2019) நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை சென்று கொண்டிருந்தபோது திருப் பூரிலும், திருச்சியிலும் நாம் சென்ற வாகனம் வழிமறித்துத் தாக்கப்பட்ட போதும், வாகனத்தின் கண்ணாடி உடைக்கப் பட்டு ஆயுதங்களுடன் பாய்ந்து நம் உயிர் குறி வைக்கப்பட்டபோதும் எதிர்ப்பைக் கடந்து திட்டமிட்ட வகையில் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி விட்டு பயணத்தை தொடர்ந்தபடி இருந்தோம். நம் பிரச்சாரப் பயணம் மட்டுமல்ல; தேர்தலும் வெற்றியைத் தந்தது.
தந்தை பெரியார் இயக்கம் நெருப்பாற்றில் நீந்திக் கரையேறிப் பழகிய ஒன்று. அதற்கான அடிப்படைப் பயிற்சியை ஆரம்ப காலம் முதலே பெற்றதனால் தான். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத அந்த ஒப்பற்ற தலைவராம் பெரியாரின் அடிச்சுவட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment