உயர்நீதிமன்ற கிளையில் அரசு தகவல்
மதுரை,டிச.2, கட்டணம் செலுத்த முடியாமல் வாய்ப்பை இழந்த அரசுப்பள்ளி மாண வர்களுக்கு காலியிடத்தில், முன்னுரிமை அடிப்படையில் சீட் ஒதுக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டம், கண் ணனூர் புல்லுவிளையைச் சேர்ந்த லதா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகள் தேவஷாலினி, நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பள்ளி மாணவருக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கலந் தாய்வில் பங்கேற்றார். அண் ணாமலை பல்கலைக்கழகத் தில் சீட் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும், ஆண்டுக்கு ரூ.5.54 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டுமெனவும் கூறினர். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பம் என்பதால் கட்டணம் செலுத்தாமல் திரும்பினோம். கலந்தாய்வு முடிந்த பிறகு கட்டணத்தை அரசு ஏற்பதாக அறிவித்தது. இதனால், என் மகளுக்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது.
எனவே அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கு மாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிரு பாகரன், பி.புகழேந்தி ஆகி யோர் முன் நேற்று விசா ரணைக்கு வந்தது. தலைமை வழக்குரைஞர் விஜய்நாரா யணன் ஆஜராகி, ‘‘அகில இந்திய இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாமல் திருப்பி அளிக்கப்படும் இடங் களிலும், காலியிடம் ஏற்படும் இடங்களிலும் தரவரிசை அடிப்படையில் முன்னுரிமை அளித்து சீட் ஒதுக்கப்படும். யாரும் கவலைப்பட வேண் டியதில்லை’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment