நல்லறிவு பகலவனே ஆசிரியர் அய்யா
நாடறிந்த மாமேதை மானமிகு கி.வீரமணி
நில்லாது உழைக்கும் நீதியரசர் நீவீர்
நிலம்பிறந்த டிசம்பர் இரண்டு இன்று
சொல்லொணா களப்பணி வல்லுநரே எண்பத்தெட்டில்
சோர்வறியா கருஞ்சட்டை சமத்துவ தொண்டரே!
எல்லோரும் நலன் வாழ்த்தும் பொன்னாளில்
என்வாழ்த்தாய் இதயத்து உயிர்வாழ்த்தாய் நல்வாழ்த்து!
பல்லாண்டு பல்லாண்டு நலன்வாழ நல்வாழ்த்து!
பாசமுள்ள இணையர் கோகனாம்மா நலம்வாழ நல்வாழ்த்து!
தொல்லைதரும் ஜாதிகடவுள் புராணப்பொய் ஒழிக்க
தொடரட்டும் பயணமிது பல்லாண்டு நலனுடனே
எல்லா நலனுடைய எண்பத்தெட்டு ஆண்டின் சிறப்பை
எண்ணினேன் எட்டுஎட்டை கூட்டினேன் பதினாறே வயது
பால்யபருவமே தொடரட்டும் துடிப்போடு உமது பணி
பகுத்தறிவு பாசறையே பெரும்படைத் தலைவரே!
எத்திக்கும் வானதிர வாழ்த்தொலிகள் இதில்
என்னுடைய வாழ்த்தொலியும் இணைந்திட விரும்புகிறேன்
பத்திரமாய் பல்லாண்டு நலன்வாழ நல்வாழ்த்து!
பாசமுள்ள இணையருடன் இனிதுவாழ நல்வாழ்த்து!
பகுத்தறிவு பாசறை கவிஞர்
அமிர்தம் சுகுமார்
உடற்கல்வி இயக்குநர் (ஓய்வு)
பொதுக்குழு உறுப்பினர், ஆத்தூர், வாழப்பாடி
No comments:
Post a Comment