வீரமணியார் வாழ்க பல்லாண்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 1, 2020

வீரமணியார் வாழ்க பல்லாண்டு!

பேராசிரியர்.மு.நாகநாதன்



சாதி ஆணவமா


சமயச் செருக்கா


முட்ட வரும் மூடநம்பிக்கையா


தீண்டாமையா


பெண் அடிமையா


கல்வி பெறத் தடையா


 


எதிர்த்து நில்


எவர் வரினும் அஞ்சேல்


 


ஆண்டான் அடிமை என்பதா


அரசமைப்புச் சட்டம் கூறுகிறதா


எரி எரி


 


பலமாதங்கள்


பல ஆண்டுகள்


சிறைத் தண்டனையா


பல ஆயிரம் தொண்டர்களுக்கா


அஞ்சாதே ஏற்றுக் கொள்


 


பதவியா தூக்கி எறி


பணமா


சொத்தா


சுகமா


புறந்தள்ளு


 


விடுதலை காந்தியா போற்று


வேதியர் காந்தியா விலகிவிடு


யார் யார் என்று பாராதே


 


மானுட விடுதலையே


முதல் நோக்கம்


 


பெரியார் எனும் அரிமாவின்


தொடக்கம்


கொள்கைப் பயணம் விரிந்தது


 


அறிஞர் அண்ணா


குத்தூசி குருசாமி


கலைஞர்


நாவலர்


பேராசிரியர்


ஆசிரியர் வீரமணியார்


இணைந்தனர்


களம் கண்டனர்


 


பல நூறு தலைவர்கள்


பல ஆயிரம் தொண்டர்கள்


 


இன்றும் இளைஞர்கள்


எழுச்சி பெறுகின்றனர்


 


களம் காணத் ‌


துடிக்கின்றனர்.


 


சுயமரியாதை ஆட்சியும் மலர்ந்தது


தமிழ்நாடு எனும் பெயர் ஒலித்தது


கல்வியில் வேலைவாய்ப்பில்


ஒடுக்கப்பட்டோர் உயர்ந்தனர்


 


பெற்ற வெற்றிகள் பலப்பல


பெற்ற வெற்றிகளை


ஆரியம் அழிக்க வருகிறது


 


மீட்போம் மீட்போம்


ஓய்தல் செய்யோம்


எழு! விழி!


களம் காண்


 


எச்சரிக்கை மணி ஒலிக்கிறது


எத்தகைய மணி


 


பெரியார் கண்ட மணி


அண்ணா போற்றிய மணி


மணி அம்மை உயர்த்திய மணி


கலைஞர் ஒலித்த மணி


கடலூர் மணி


கலங்காத மணி


பகைவர் கண்டு


அஞ்சா  மணி


 


70 ஆண்டுகளாகத்


தமிழர் விடுதலைக்காக


எழுதும் மணி


பேசும் ‌மணி


 


ஓயாது ஒலிக்கும் மணி


வைரம் பாய்ந்த கொள்கை மணி


 


குன்றா மணி ! எங்கள் மணி!!


 


எட்டு எட்டு


எண்பத்தெட்டு


என்றே ஒலிக்கும் ‌மணியைப்


 


பல நூறு ஆண்டுகள்


தமிழர் விடியலுக்காக ஒலிக்கட்டும்


எங்கள் மணி


என்பேன்.


 


எட்டுத் திக்கும்


வாழ்க ! வாழ்க !!


என


எங்கள் இனமான


மணி ஒலிக்க


வாழ்த்துகிறேன்.


No comments:

Post a Comment