தஞ்சை குடும்ப விளக்கு நலநிதி மேலாளர் வேணுகோபால் 5 ஆண்டு விடுதலை சந்தாவையும், அம்மாபேட்டை ஒன்றிய துணைத் தலைவர் சொ. உத்திராபதி ஒரு விடுதலை சந்தாவையும், தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றியத் தலைவர் ச .கண்ணன், ஒன்றியச் செயலாளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் ஆகியோர் 7 விடுதலை சந்தாவையும், துரையுண்டார்கோட்டை து.நாராயணசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.அன்பரசு ஆகியோர் விடுதலை சந்தாவையும், கள்ள பெரம்பூர் வ.சுந்தரமூர்த்தி ஒரு விடுதலை சந்தாவையும், அக்ரி சிவஞானம் ஒரு விடுதலை சந்தாவையும், கழகப் பொதுச் செயலாளர் ஜெயகுமாரிடம் வழங்கினர்.
தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வடசேரி ஞானசிகாமணி வழங்கிய 6 சந்தா உள்பட 16 விடுதலை சந்தா வழங்கினார். உடன்: மாநில விவசாயத் தொழிலாளரணி செயலாளர் இராயபுரம் கோபால், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், உரத்தநாடு ஒன்றியச் செயலாளர் ஆ.இலட்சுமணன், நகரத் தலைவர் பேபி ரெ. இரவிச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் ந.பிரபு, பெரியார் நகர் அ.உத்ராபதி, இராஜேஷ். (30.11.2020)
மன்னார்குடி கழக மாவட்டம் எட கீழையூர் பெரியார் பெருந்தொண்டர் ரெ.மணி (வயது 88) அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். அவர் ஒரு விடுதலை சந்தாவை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் நகரத் தலைவர் சட்ட எரிப்பு வீரர் ம.செல்ல முத்துவின் 84ஆம் ஆண்டு பிறந்த நாளான நவ.30 ஆம் தேதி கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். செல்லமுத்து, கோவிந்தம்மாள், தனியரசு ஆகியோர் ஒரு விடுதலை சந்தா வழங்கினர்.
இராசபாளையம் நகர திமுக துணைச்செயலளார் மானமிகு போ.சரவணன் அவர்கள் விடுதலை ஒரு ஆண்டு சந்தா தொகையை விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இல.திருப்பதி அவர்களிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment