புத்தருக்குப் பிறகு பிறந்த மாபெரும் இந்தியரான காந்தி யின் உதவியாளராக இருந்த திரு.கல்யாணம் அவர்களின் உரையை அண்மையில் கேட்ட நான் அதனால் மிகவும் கவரப்பட்டேன். நானும் மகாத் மாவுடன் நடந்திருக்கிறேன் என்று நியாயமான தனது பெருமையை மிகுந்த அடக்கத்துடன் அவர் வெளிப்படுத்தினார். ஆசிரியருடன் நான் நடந்தி ருக்கிறேன் என்ற அது போன்ற பெருமையை நானும் உணர்கிறேன்! அவரைப் பற்றி அறிந்து கொண்டது மட்டுமன்றி, அவருக் காகவும் அவரு டன் இணைந்தும் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை ஓர் அரிய பேறாக நான் கருதுகிறேன். அத்துடன் அவரது அன்பையும், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களின் அன்பையும் பெற்று பயனடைந் துள்ளது பற்றியும் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கி றேன்.
- வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம் ('வியப்பின் மறுபெயர் வீரமணி'
நூலின் அணிந்துரையில்)
No comments:
Post a Comment