திராவிடர் கழக நிகழ்ச்சிகளிலும் போராட்டங் களிலும் பங்கேற்றுவரும் சூளைமேடு பிடிசி ராஜேந் திரன் அவர்களின் தந்தையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் 9ஆவது தெருவை சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) அவர்கள் 2.12.2020 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். 3.12.2020 அன்று மாலை 3 மணி அளவில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்புக்கு: 9710242747.
- - - - -
திருவண்ணாமலை மாவட்ட வேட்டவலம் நகர திராவிடர் கழகம் சார்பில் வேலூர் மண்டல செயலாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தலைமையில்,நகர தலைவர் சு.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.திருமலை, மதிவாணன், அறிவரசு, சீனுவாசன் ஆகியோர் உடல்நலக் குறைவால் மறைவுற்ற வேட்டவலம் கழக செயலாளர் கு.அருண்குமாரின் தந்தையார் செஞ்சி குப்புசாமி (2.12.2020) அவர்களின் உடலுக்கு நகர கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment