விவசாயிகள் முடிவு
சேலம், டிச.11, சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிப்ப தாகவும், அத்திட்டத்தை அரசு முழுமை யாக கைவிடும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில், 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்களை மாநில அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து பாதிக்கப்படும் விவசாயிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். அதில், சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் கைப்பற்றப்பட்ட நிலத்தை அரசு நிலமாக மாற்ற தடை விதிப்பதாகவும், ஏற்கனவே உள்ள நடைமுறைகளை நீக்கி விட்டு, புதிதாக சுற்றுச்சூழல் மாசு இல்லாத வகையில் திட்டத்தை செயல் படுத்த, மத்திய அரசு புதிய அறிவிப் பாணை வெளியிடலாம் எனவும் கூறப் பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அரசு நிலமாக மாற்ற தடை விதித்ததை விவசாயிகள் கொண் டாடினர்.
அதேவேளையில், மீண்டும் நிலம் எடுக்க புதிய அறிவிப்பாணை வெளியிட மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது எனக் கூறியிருப்பதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தற்காலிக மகிழ்ச்சியாகவே பார்க்கிறோம் என, சேலத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூறினர். சேலம் மாவட்டத்தில் பூலாவரி, வீர பாண்டி, நெய்காரப்பட்டி, ராமலிங்க புரம், குள்ளம்பட்டி, குப்பனூர் பகுதியில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள், ராமலிங்கபுரத்தில் திரண்டு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, சேலம்-சென்னை இடையே ஏற்கெனவே 3 சாலைகள் உள்ள நிலையில், இத்திட்டமே வேண்டாம் என்பதே அனைவரின் நிலைப்பாடு. அதனால், மத்திய, மாநில அரசுகள் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தக் கூடாது. முழுமையாக கைவிட வேண்டும்.
No comments:
Post a Comment