பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 9, 2020

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத் தலைவர் அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா

 

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் ஒவ் வொரு ஆண்டும் நிறுவனர் நாள் விழாவாக கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டு 2.12.2020 அன்று காலை 10 மணியளவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும், நிறுவனத் தலைவர் எழுதியஒப்பற்ற தலைமை", "வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 15", பேராசிரியர் அருணன் எழுதிய "ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்" ஆகிய மூன்று புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் துணை முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment