சிகாகோ, டிச. 8 அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில், தமிழர் தலைவர் டாக்டர். கி. வீரமணி அவர் களின் 88ஆவது பிறந்தநாள் இணையவழி சிறப்பு காணொலி நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மிகச் சிறப்பாக நடந்தது . இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான அமெரிக்கத் தமிழர்களும் பெரியார் பிஞ்சுகளும் கழக தோழர்களும் பெரியார் பற்றாளர் களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர். சோம இளங்கோவன் மற்றும் பெரியார் பன்னாட்டு மய்ய விழாக்குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதலில் மருத்துவர் சோம. இளங் கோவன் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முதல் பகுதி ஆங்கி லத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவர். குமார் இளங்கோவன், Humanist Mr. Norm Allen, ஜெர்மனி பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர், பேராசிரியர் Ulrike Niklas, மற்றும் American Humanist Association இயக்குனர் Mr.Roy Speckhardt பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இதனை தொடர்ந்து ஆசிரியர் ஆங்கிலத்தில் ஏற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி தமிழில் நடைபெற்றது. குழந்தைகளின் வாழ்த்தரங்கமாகவும் கேள்வி பதில் நிகழ்வாகவும் பிறகு பெரியவர்களின் வாழ்த்தரங்கமாகவும் நடைபெற்றது. முதலில் பெரியார் பிஞ்சுகள் ஆசிரியர் தாத்தாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு, பெரியார் பொன்மொழியை கூறினர். அத்துடன் ஆசிரியர் தாத்தாவிடம் கேள்விகள் கேட்டனர். ஆசிரியர் மிக பொறுமையாக அனைத்து பெரியார் பிஞ்சுகளின் கேள்வி களுக்கும் மகிழ்ச்சியுடன் தெளிவாக பதில் கூறினார். பெரியார் பிஞ்சுகள் எயினி சுபாஷ், இலக்கணன் சுபாஷ், ஆதவன் பாலமுருகன், ஜாய் புண்ணியராஜ், கவினி ராயன், கவின் ரமேஷ், இனியா எழில்வடிவன், இலக்கியா எழில்வடிவன், கண்மணி அன்பு துரைக்கண்ணன், இளங்கதிர் இளமாறன், இலக்கியா இளமாறன், கவின் கபிலன்,யாழினி ரவிக்குமார் பங்கேற்று ஆசிரியர் தாத்தாவிடம் கேள்விகள் கேட்டனர். ஆசிரியர் குழந்தைகளுடன் மிக மகிழ்ச்சியாகவும், குதூகலத்துடனும் நேரத்தை செலவிட்டார். பெரியார் பிஞ்சுகள் கேட்ட கேள்விகள் எல்லாமே சிறப்பு தான். அவற்றுள் சிறந்த கேள்வி மற்றும் பெரியார் பொன்மொழி கூறிய இரு பிள்ளைகளை தேர்ந்தெடுத்து, முதல் பரிசாக இளங்கதிர் இளமாறனிற்கு 50 டாலர், இரண்டாம் பரிசாக இனியா எழில்வடிவனுக்கு 25 டாலர் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. குழந்தைகள் நிகழ்விற்கு தமிழ்மணி வேலாயுதம் அவர்கள் பொறுப்பேற்று பரிசுகளை அறிவித்தார்.
பெரியார் பிஞ்சுகளின் நிகழ்ச்சியை தொடர்ந்து பெரியார் பற்றாளர்கள், இயக்கத்தின் ஆதரவாளர்கள், ஆசிரியர் மீது அளவற்ற அன்புகொண்டவர்களின் வாழ்த்தரங்கம் நடைப்பெற்றது. இதில் புளோரிடாவிலிருந்து, முன்னாள் தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர், மாணிக்கம், முன்னாள் தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர், மோகனம், சிகாகோவிலிருந்து பேராசிரியர் சோம. வேலாயுதம், ஆசிரியரின் வகுப்புத் தோழர், அட்லாண்டாவிலிருந்து சவுந்தரராசன் Syracuse - நியூயார்க் தோழர் நந்தினி மதனகோபால், Chantilly - விர்ஜினியா தோழர் மேரி பொன்முடி, பேராசிரியர் அரசு செல்லையா மற்றும் பேராசிரியர் மீனா செல்லையா, Mr. Justifus, US Tamil Action group – Elias Jeyaraja ஆகியோர் ஆசிரியரை வாழ்த்தினர். ஆசிரியர் நூற்றாண்டை கடந்து வாழ வேண்டும், தமிழ் இனத்திற்கு பெரும் பாதுகாப்பு அவர் என்று பெரிதும் வாழ்த்தினர். தோழர் மேரி பொன்முடி, ஆசிரியரை பற்றிய அருமையான கவிதை வாசித்தார். ஆசிரியரின் வகுப்புத் தோழர், அட்லாண்டாவிலிருந்து சவுந்தரராசன் பேசியபொழுது , நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்த நண்பர்கள் ஒருவொருக்கொருவர் அன்பை பொழிந்த நிகழ்வு பார்த்துக்கொண்டிருந்தவர்களின் நெஞ்சை மகிழ்வுற செய்தது.
ஆசிரியரின் ஏற்புரையில், "என் னுடைய பிறந்தநாள் முக்கியம் அல்ல; உங்களையெல்லாம் இதன்மூலம் சந்தித்ததும், உங்களோடு பேசியதும், உறவாடியதும் எனக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது" என்று சொல்லி மகிழ்ந்தார்.
சந்தாக்கள் வழங்கல்
தோழர் ரவிக்குமார் பெரியார் பன் னாட்டு மய்யத்தின் சார்பில், 88 விடுதலை, 88 உண்மை,88 தி மாடர்ன் ரேசனலிஸ்ட், 88 பெரியார் பிஞ்சு ஏடுகளுக்கான சந்தாக்களை வழங்கினார்.
ஆசிரியர் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில், Northern Illinois Food bank-கிற்கு 250 டாலர் கொடுக்கப்பட்டது. Matching மூலமாக இந்த தொகை 2000 டாலர் பெறுமானமுள்ள உணவு பொருட்களாக வறியோருக்கு வழங்கப்பட்டது. ஆசிரியர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.நிகழ்ச்சியின் முடிவில் தோழர் வினோப்ரியா அனைவருக்கும் நன்றி கூறினார். ஆசிரியரைப் பற்றிய அழகிய கவிதையையும் வாசித்தார்.
மொத்தத்தில் இந்நிகழ்ச்சி அமெரிக்க தமிழர்களிடையே ஒரு புத்துணர்வையும் குதூகலத்தையும் பெரியார் இயக்கத்தின் மீதான ஆதரவையும் வழங்கியது. இந்நிகழ்ச்சிக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்தவர் தோழர் சரவணகுமார். இந் நிகழ்ச்சியை து.ச. அறிவுப்பொன்னி தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment