நூல் வெளியீடு - தலைவர்கள் பங்கேற்பு
சென்னை, டிச. 1- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 2.12.2020 மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெறுகிறது.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட் டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், திரு வொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோர் முன்னி லையில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வர வேற்புரை ஆற்றுகிறார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்குகிறார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தேனீக்களாக சுற்றிச் சுழன்று திரட்டிய விடுதலை சந்தாக்களை கழகப்பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குரிய பிறந்த நாள் பரிசாக அளிக்கிறார்கள்.
நூல்கள் வெளியீடு - தலைவர்கள் பங்¢கேற்பு
ஊரடங்கு காலகட்டத்தில் காணொலியில் ‘ஒப்பற்ற தலைமை’ தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய தொடர் சொற்பொ ழிவின் தொகுப்பு நூலான ஒப்பற்ற தலைமை நூலை, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டு உரையாற்றுகிறார்.
‘காலந்தோறும் பிராமணீயம்’ நூலில் திரா விடர் கழகம், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றி வரும் பணிகள்குறித்து பேராசிரியர் அருணன் குறிப்பிட்டுள்ள பகுதிகளைக் கொண்ட ‘ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திரா விடர் கழகம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டநூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் வெளியிட்டு உரையாற்றுகிறார்.
கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஓய் வின்றி ஆற்றிவரும் தமிழர் தலைவர் அவர்களின் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொகுப்பான 15 ஆம் தொகுதி நூலை கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வெளியிட்டு உரையாற்றுகிறார்.
‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆங்கில மாத இதழ் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 88 ஆவது பிறந்த நாள் 2020 ஆண்டு சிறப் பிதழை தமிழக அரசின் திட்டக்குழுவின் மேனாள் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் வெளியிட்டு உரையாற்றுகிறார்.
நூல் வெளியீட்டைத் தொடர்ந்து, தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலமாக ஏற் புரை ஆற்றுகிறார். விழா முடிவில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி யுரை ஆற்றுகிறார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் எழுச்சியுடன் சுயமரியாதை நாளாக கொண்டா டப்படுகிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், குருதிக் கொடை முகாம்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
2.12.2020 புதன்கிழமை ஆத்தூர்
ஆத்தூர்: மாலை 4.00 மணி * இடம்: ராஜ்கிருஷ்ணா ரெசிடன்சி, ஆத்தூர் * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: விடுதலை சந்திரன் (மண்டல தலைவர்), வெ.அண்ணாதுரை (மண்டல செயலாளர்), சு.அமிர்தம்மாள் (பொதுக்குழு உறுப்பினர்) * நூல் வெளியிட்டு உரை நிகழ்த்துபவர்: எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.) * நூல் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்துபவர்கள்: ம.அர்த்தநாரி (கிழக்கு மாவட்ட தலைவர், காங்கிரஸ் கமிட்டி), கு.சின்னதுரை (கெங்கவல்லி) * நன்றியுரை: கூ.செல்வம் (மண்டல இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்).
நாகர்கோவில்
நாகர்கோவில்: காலை 9.00 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * வரவேற்புரை: பா.பொன்னுராசன் (கழக இலக்கிய அணி செயலாளர்) * தலைமைதாங்கி நூல் அறிமுக உரை: எம்.எம்.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: சி.கிருஷ்ணேஸ்வரி (மகளிரணி மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), உ.சிவதா (ப.க. மாவட்டத் தலைவர்), முனைவர் ஜே.ரி.ஜூலியஸ் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * நன்றியுரை: மஞ்சு குமார தாஸ் (மகளிர் பாசறை தலைவர்).
தருமபுரி
தருமபுரி: காலை 9.30 மணி * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * கருத்தரங்கம் 11 மணி * தொடக்கவுரை: அ.தமிழ்ச்செல்வன் (தருமபுரி மண்டலத் தலைவர்) * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர்) * ஜாதி ஒழிப்பு களத்தில் ஆசிரியர் - இரா.வேட்ராயன், மூடநம்பிக்கை ஒழிப்பில் ஆசிரியர் - மா.கிருஷ்ணன், கலைஞரின் உற்றதுணை ஆசிரியர் - சா.இராஜேந்திரன், சமூகநீதி களத்தில் ஆசிரியர் - மாரி.கருணாநிதி, போராட்ட களத்தில் ஆசிரியர் - த.யாழ்திலீபன், விடுதலை களத்தில் ஆசிரியர் - கதிர்செந்தில்குமார், பெண்ணுரிமை களத்தில் ஆசிரியர் - ம.சுதாமணி * நூலை பெற்றுக்கொள்ளும் தோழர்கள்: சி.காமராஜ், தீ.சோழவேந்தன், மாத.செந்தில்குமார் * நன்றியுரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்ட அமைப்பாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.
ஒசூர்
ஒசூர்: காலை 11.00 மணி * இடம்: சப்தகிரி பள்ளி வளாகம் அலசனத்தம் ரோடு, ஒசூர் * தலைமை: பி.டார்வின்பேரறிவு (ஒசூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: எம்முகமது அப்ரிடி (சட்டக் கல்லூரி அமைப்பாளர், ஒசூர்) * தொடக்கவுரை: ல.ம.நன்மதி * விளக்கவுரை: சு.வனவேந்தன் (ஒசூர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.துக்காராம் * நூல் அறிமுகம் செய்து வாழ்த்துரை: பேரா.கு.வணங்காமுடி (ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * நூல்களை பெறும் தோழர்கள்: பாவலர் கருமலை தமிழாளன், கணேஷ்மூர்த்தி, ஒப்பரவாளன் * நன்றியுரை: செ.வா.மதிவாணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).
கீழப்பாவூர்
கீழப்பாவூர்: காலை 9.30 மணி * கீழப்பாவூர் பெரியார் திடல் * தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: வே.முருகன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (தென்மாவட்ட பிரச்சார குழு செயலாளர், * நூல் அறிமுகம் செய்து சிறப்புரை: பொ.சிவபத்மநாதன் (தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர்), எஸ்.பழனி, தி.மு.இராஜேந்திரன், அ.எழில்வாணன், இராம.உதயசூரியன், டேனியல்அருள்சிங், வை.கலிவர்ணன், குற்றாலம்குமார் * நன்றியுரை: ம.இராமசாமி (நகர கழகத் தலைவர்) * ஏற்பாடு: தென்காசி மாவட்ட திராவிடர் கழகம்.
4.12.2020 புதன்கிழமை புத்தகரம்
புத்தகரம்: மாலை 6.00 மணி * இடம்: ஷஃபா திருமண மண்டபம், மெயின் ரோடு, புத்தகரம் * வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * தொடக்க உரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நூல் அறிமுகம் செய்து உரை: "ஒப்பற்ற தலைமை" - என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர், தி.மு.க.), "ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்" - நாகை மாலி (நாகை மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), "வாழ்வியல் சிந்தனை தொகுதி - 15" - செல்வ.செங்குட்டுவன் (ஒன்றிய செயலாளர், தி.மு.க. திருமருகல் (வடக்கு)) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்).
நூல் அறிமுக
விழாவில் மூன்று நூல்களும் தள்ளுபடி விலையில்
ரூ.400 மட்டுமே
No comments:
Post a Comment