வடக்குத்து இந்திரா நகரில் தமிழர் தலைவர் 88ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் - விடுதலை சந்தா வழங்கினர் வடக்குத்து இந்திரா நகரில் 1.12.2020அன்று தமிழர் தலைவர் கி. வீரமணி 88ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் சொ. தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. சி. மணிவேல் வரவேற்புரை ஆற்றினார். புலவர் ராவணன் மதவெறி மாய்ப் பாளர் என்னும் தலைப்பிலும், சீரிய பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் என்னும் தலைப்பில் க. எழிலேந்தி, சமூக நீதி காவலர் என்னும் தலைப்பில் நா. தாமோதரன் ஆகியோர் கருத்தரங்க உரை ஆற்றினர். கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார். விடுதலை சந்தாக்களை தோழர்கள் வழங்கினர். நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் இயக்க ஆதரவாளர் முருகன் விடுதலை நாளிதழுக்கு சந்தாவினை மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் ஈட்டி கணேசன் அவர்களிடம் வழங்கப்பட்ட விடுதலை சந்தா
No comments:
Post a Comment