திருச்சி, டிச. 7- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர், தமிழர் தலை வர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாளான 02.12.2020 அன்று காலை 11 மணியளவில் நாட்டு நலப்பணித் திட் டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பெரியார் மன்றத்தின் சார்பாக சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரி யின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரையில் ஆசிரியர் அவர்களின் வரலாறு தனிப்பட்ட மனிதரின் வரலாறு அல்ல அது தமிழ்நாட்டின் வரலாறு. அவர் களின் பிறந்தநாளினை கொண்டாடுவது சிறப் பிற்குரியது என்று உரையாற்றினார். பேராசிரி யர் முனைவர் அ.மு. இஸ்மாயில் அவர்கள் தமது வாழ்த்துரையில் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் வாழ்வியல் நெறிகளை எடுத் துக்கூறியதுடன் தந்தை பெரியார் அவர்கள் கட்டிக்காத்த சமூகநீதியை நிலைநாட்டிட ஆசிரியர் அவர்கள் 69 சதவிகித இடஒதுக்கீட் டினை தமிழ்நாட்டில் நிறைவேற்றிய மாண் பினை எடுத்துரைத்தார்.
வரலாற்றை உருவாக்கக்கூடிய...
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தமது தலைமையுரையில்: தமிழர் தலைவர் நிறுவனத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடுவதில் நாம் பெருமை யடைய வேண்டும். ஏனெனில் 88 ஆண்டுகளில் 78 ஆண்டுகள் பொதுவாழ்க்கை என்பது எந்தவொரு தலைவருக்கும் கிடைத்திடாத பெருமை. வரலாறு தெரிந்த, வரலாற்றை உருவாக்கக்கூடிய தலைவர் ஒருவர் உண்டு என்றால் அவர் நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான். இனிவரும் தலைமுறையினர் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று சமத்துவமாக வாழ வேண்டும் என்றால் அதற்கு நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நல்ல உடல் நலத்தோடு வாழவேண்டும். இயக்கப்பணி, கொள்கைப்பணி, கல்விப்பணி என இடை விடாது சமுதாயப்பணிகள் தொடர்ந்து செய் தாலும் புத்தகம் வாசிப்பதனை தமது சுவாசமாக கொண்டவர். சொந்த புத்தி தேவையில்லை அய்யா தந்த புத்தி ஒன்று போதும் என்று அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த பாதையில் சிறிதும் அடிபிறழாமல் அவர் காண விரும்பிய சமுதாயம் படைக்க தொய் வின்றி உழைத்து வருகிறார். அவரின் உழைப்பு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டதன் அடை யாளமே அவர்கள் பெற்ற மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது. இவ்விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் நம்முடைய நிறுவனத் தலைவர் அவர்கள். அவர்களின் வாழ்வியலை பணியாளர்கள் முன் மாதிரியாகக்கொண்டு தங்கள் வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்று எடுத்துக்கூறி அனை வருக்கும் நிறுவனத் தலைவரின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
தமிழினம் தலைநிமிர
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திராவி டர் கழக கிராமப் பிரச்சார அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன் அவர்கள் "தமிழினம் தலைநிமிர களம் காணும் தலைவர்" என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் திராவிட இயக்கத் தலைவர்களில் முதுபெரும் தலைவராக, தமிழ்நாட்டிற்கு வழி காட்டும் தலைவராக ஒருவர் இருக்கிறார் என்றால் அவர்தான் இன்றைய தினம் பிறந்த நாள் காணும் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். 10 வயதிலேயே மேடையேறி திரா விடக் கொள்கைகளை மடைதிறந்த வெள்ள மென பேசிய பெருமைக்குரியவர். பேச்சின் கூர்மையை கண்டு பேரறிஞர் அண்ணா அவர் கள் திராவிட இனத்தின் திருஞான சம்பந்தர் என உச்சி முகர்ந்து பார்த்திருக்கின்றார் என் றால் அவரின் கொள்கை வீரியத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்று உரையாற் றினார். மேலும் 69 சதவிகித இடஒதுக்கீட்டினை கொண்டு வருவதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் எதிர்கொண்ட இன்னல்களையும் அன்றைய பிரதமராக திகழ்ந்த வி.பி. சிங் அவர்கள் சமூக நீதிக் காவலராக உயர்ந்த மாண்பினையும் எடுத்துக்கூறினார்.
ஆரிய சக்திகளின் அச்சுறுத்தல்கள் அதிக மாக நடைபெறும் இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டு மண்ணை, பெரியார் மண்ணை காக்க நமக்காக இருக்கக்கூடிய ஒரே தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் என்றும் அவருடைய பிறந்த நாளினை கொண்டாடுவது நம்முடைய எதிர்காலத்திற்கான அடித்தளம் என்றும் உரையாற்றினார். நிறைவாக பெரியார் மன்ற இணைச் செயலர் திருமதி அ. ஷமீம் நன்றியு ரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment