முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா வேண்டுகோள்
தஞ்சாவூர், டிச. 5 1.12.2020 மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஒப்பற்ற தலைமை, ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம், வாழ்வியல் சிந்தனைகள் புத்தக அறிமுக விழா மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாவலர் பொன்னரசு கழக பாடல்களை பாடினார்.
தஞ்சை மாநகர திராவிடர் கழக தலைவர் பா. நரேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
மாநில கலைத்துறை செயலாளர் ச. சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலாளர் தி.வ. ஞானசிகாமணி, தஞ்சை மாவட்டச் செயலாளர் அ. அருணகிரி, மாநில ப.க. துணைத் தலைவர் கோபி பழனிவேல், கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், கழகக் காப்பாளர் வெ. ஜெயராமன், கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவர் சிறப்புகள் குறித்து உரையாற்றினர்.
வாழ்த்துரை
திராவிட முன்னேற்றக் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் து. செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் விழா தலைமையுரை யாற்றினார்.
ஒப்பற்ற தலைமை நூல் வெளியீட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா உரை
கரோனா காலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலியில் ஆற்றிய உரையின் தொகுப்பு 'ஒப்பற்ற தலைமை' என்ற நூலினை முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிறப்புகள், சமூகநீதிக் களத்தில் அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்தும் 88 ஆண்டுகளில் 78 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று வாழும் மூத்த தலைவராக திராவிட இயக்கங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.
வாழ்வியல் சிந்தனை நூல் வெளியீட்டு பி.ஜி. இராஜேந்திரன் உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதி பிறந்த நாள் வெளியீடாக வெளி வந்துள்ள "வாழ்வியல் சிந்தனைகள்" பாகம் 15 என்ற நூலினை வெளியிட்டு அறிமுகம் செய்து தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் விடுதலை வாசகர் பி.ஜி. இராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். ஆசி ரியர் அவர்களின் சிறப்புகள் குறித்து வாழ்த்துரையாற்றினார்.
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் நூலினை வெளியிட்டு ந. குருசாமி உரை
பேராசிரியர் அருணன் அவர்கள் எழுதிய ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் என்ற புத்தகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநகர செயலாளர் ந. குருசாமி அறிமுகம் செய்து வாழ்த்துரை வழங்கி நூலின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.
நூல்களை பெற்று கொண்டோர்
தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் து. செல்வம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மேத்தா (திமுக) மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் இரா. சரவணக்குமார், மாவட்ட ப.க. தலைவர் ந. காமராஜ், மாவட்ட ப.க. செயலாளர் ச. அழகிரி மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆசிரியர் ராஜு, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சங்கர், திருவையாறு ஒன்றிய தலைவர் ச. கண்ணன், அம்மாப் பேட்டை ஒன்றிய செயலாளர் காத்தையன், தஞ்சை மாநகர அமைப்பாளர் செ.தமிழ்செல்வன், நகர செயலாளர் சு. முருகேசன், மாநில கலைத்துறை செயலாளர் ச. சித்தார்த்தன், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ. நாராயணசாமி, வழக்குரைஞர் சத்தியமூர்த்தி, மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, வடசேரி தி.வ. ஞானசிகாமணி, இராமையன், கா. கருணாமூர்த்தி, ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் நாத்திகன். குப்பு வீரமணி உள்ளிட்டோர் நூல்களை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் பங்கேற்றோர்
மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு, அ. இராமலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந. வெங்கடேசன், மண்டல இளைஞரணி செயலாளர் வே. இராஜவேல், மாவட்ட துணைச் செயலாளர் ச. சந்துரு மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் செ. ஏகாம்பரம், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச. கண்ணன், பூத்தூர் ஒன்றியத் தலைவர் அல்லூர் இரா. பாலு, ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் த. ஜெயகநாதன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் ஆ. லெட்சுமணன், பெரியார் நகர் அ.உத்திராபதி, மண்டல மகளிரணி செயலாளர் அ. கலைச்செல்வி, அம்மன்பேட்டை எம்.எஸ். கலியபெருமாள், தங்க. வெற்றிவேந்தன், தி.மு.க. பழக்கடை அன்பு, ஒரத்தநாடு ஒன்றிய இளைஞரணி செய லாளர் அன்பரசு, தஞ்சை நகர இளைஙரணி தலைவர் மதன்ராஜ் அடையார்கோவில் கோவிந்தன், பகுதி செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ச. அஞ்சுகம், செண்பகபுரம் தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏராள மான கழகத் தோழர்களும், அனைத்து இயக்கங்களை சேர்ந்த தோழர்களும், பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித் தனர். இறுதியாக தஞ்சை மாநகர செயலாளர் சு. முருகேசன் நன்றி கூறினார்.
பேச்சுப் போட்டி
"இந்த கரோனா காலத்தில் காணொலியில் ஆசிரியர் ஆற்றிய உரைத் தொகுப்பாக பல அரிய தகவல்கள், வரலாற்றுச் சுரங்கமாக திரு.வி.க. போன்றோர் தந்தை பெரியாரிடம் எப்படி நட்பு பாராட்டினர் போன்ற பல அரிய தகவல்கள் அடங்கியதுதான் "ஒப்பற்ற தலைமை" என்ற அரிய நூல் இந்த நூலை கல்லூரி தொடங்கி பள்ளிகள் வரை படிக்கும் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அவர்களிடம் இந்த நூலைக் கொண்டு செல்ல ஒரு பேச்சுப்போட்டியை ஜனவரி மாதத்தில் நடத்திட வேண்டும் நடுவர்களையும் நானே அனுப்புகிறேன். அதற்கான பரிசு தொகை முதல் பரிசு ரூ.7,000, இரண்டாவது பரிசு ரூ.5,000, மூன்றாம் பரிசு ரூ.3,000 என மூன்று பிரிவாக நடத்திட, ரூ.50,000 எனது பொறுப்பாக வழங்கிட உறுதியளிக்கிறேன்" என முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment