திருச்சியில் உள்ள சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் உள்ள தோழர்களுக்கும், நாகம்மையார் குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கும் தமிழர் தலைவர் அவர்களின் 88ஆவது பிறந்தநாளையொட்டி (2.12.2020) திருச்சி மாவட்ட கழகத்தின் சார்பில் ஆரோக்கியராஜ் இனிப்பு வழங்கினார்.
திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா 2.12.2020 அன்று நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பில் மாவட்ட கழக தலைவர் எம்.எம். சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. பெரியார் மய்யத்தில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம. தயாளன், துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், திமுக ஒன்றிய செயலாளர் ஆ.லிவிங்ஸ்டன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, திராவிட மகளிர் பாசறை மாவட்ட தலைவர் மஞ்சு குமாரதாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் குமாரதாஸ், மாநகர அமைப்பாளர் சு.ராஜகோபால், மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது, முருகபதி தோழர்கள். முத்து வைரவன், செல்வின், ஆறுமுகம், பிரதீஷ்ராஜா, பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment