சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்குத் தடை தொடரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 8, 2020

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்குத் தடை தொடரும்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

புதுடில்லி,டிச.8 சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் சேலம்-சென்னை இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்த அதிவிரைவு சாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

இந்த 8 வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1900 எக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எனஅனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணை ரத்து இதற்கிடையே, 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.

 கடந்த அக்டோபர் 2ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

திட்டத்திற்குத் தடை தொடரும் என தீர்ப்பு!!

இந்த நிலையில் இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய

அமர்வு இன்று (8.12.2020) காலை தீர்ப்பு வழங்கி உள்ளது.

அந்த தீர்ப்பில், 'சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு

சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது செல்லும்.தேசிய

நெடுஞ்சாலை ஆணைய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி

செய்கிறோம்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம்

இன்று வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில்தான் சேலம்-

சென்னை 8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

இதனால் இந்த தீர்ப்பினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி

அடைத்துள்ளனர்.

No comments:

Post a Comment