சென்னை, டிச. 31- சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட போகிப்பாளையம் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் இணைப்பு வசதியை ஏற் படுத்தி தர சென்னை மாநக ராட்சி முன்வந்துள்ளது.
இப்பகுதி
மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையை
மாநகராட்சியின் கவனத் திற்கு கொண்டு
சென்று அந்த தொகுதியின் சட்டமன்ற
உறுப் பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். போகிப்பாளையம் குடியி ருப்பு பகுதியில்
கிட்டதட்ட 338 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள்
சென்னை மாநகராட்சி தூய்
மைப்பணி யாளர்களுக்காக 60ஆண்டுக ளுக்கு முன்பு
கட்டப்பட்டது. இந்தபகுதி மக்கள் குடிநீர் இணைப்பு
வசதியில்லாமலும் சுகாதார சீர்கேட்டினாலும் அவதிப்பட்டு வந்தனர்.
சொத்துவரியை மதிப்பீடு செய்து அதற்கான ரசீது
வழங்கி தடையில்லா சான்று மூலமாக சென்னை பெருநகர குடிநீர்
மற்றம் கழிவுநீர் அகற்றுவாரியத்தின் வாயிலாக இப்பகுதிக்கு குடிநீர்
இணைப்பு ஏற்படுத்திதர வேண்டும் என்று சட்ட மன்ற
உறுப்பினர் இரவிச்சந்திரன் வலியுறுத்தினார்.
மேலும்இந்த
கோரிக் கையை அவர் சம்பந்தப்பட்ட
துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு அதி
காரிகளை நேரில் சந்தித்து முறையிட்டதால்
கோரிக் கையை நிறைவேற்ற மாநக
ராட்சி ஆணையர் முன்வந் துள்ளதாக
சட்டமன்ற உறுப் பினர் அலுவலக
செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment