குடந்தை மாவட்டத்தில் மூன்றாவது சுற்றில் சேகரிக்கப்பட்ட 57 (ரூ.62,450/-) விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 4, 2020

குடந்தை மாவட்டத்தில் மூன்றாவது சுற்றில் சேகரிக்கப்பட்ட 57 (ரூ.62,450/-) விடுதலை சந்தா


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88 - ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக அவர் பெரிதும் விரும்பும் விடுலை சந்தாக்களை   குடந்தை கழக மாவட்டம் சார்பாக கழகத் தோழர்கள் மூன்றாவது சுற்றாக 29-11-2020, 30-11-2020 தேதிகளில் 57 விடுதலை சந்தா (12- ஆண்டு சந்தா, 45 - அரையாண்டு சந்தா) மற்றும்  1- உண்மை சந்தாக்களை  சேர்த்து அதற்கான சந்தா தொகையான ரூ.62,450/- வழங்கியுள்ளனர். 


சந்தா சேகரிப்பில் பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயக்குமார்,  மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் உள்ளிக் கடை சு.துரைராஜ், திருவிடைமருதூர்  ஒன்றியத்தலைவர் எம்.என்.கணேசன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ந.முருகானந்தம், ஒன்றிய பிரதிநிதி ந.சிவக்குமார், குடந்தை பெருநகர செயலாளர்  பீ.இரமேஷ், திருநாகேஸ்வரம் நகர செயலாளர் வீ.திராவிடபாலு, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அ.சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர்/பொதுக்குழு உறுப்பினர் க.சிவக்குமார், மாவட்ட மகளிரணி து.செயலாளர் மு.திரிபுரசுந்தரி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் உஷாராணி சங்கர், திருவிடைமருதூர் ஒன்றிய து.செயலாளர் நாச்சியார்கோயில் குணா, மாநில மாணவர் கழக து.செயலாளர் ச.அஜிதன், நகர மாணவர் கழக தலைவர் அரவிந்தன்  உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் இணைந்து கும்பகோணம், பாபநாசம், திருநாகேஸ்வரம்,  நாச்சியார் கோவில் பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களை யும்  சந்தித்து மாவட்ட கழகத்தின் சார்பில் சந்தாக்களை திரட்டியுள்ளனர்.


குடந்தை கழக மாவட்டத்தின் சார்பில் தோழர்கள் இதுவரை  88 விடுதலை சந்தாக்களையும், இன்னும் 100 ஆண்டுகள் அய்யா அவர்கள் நலமுடன் வாழ்ந்து நம் இனத்தையும், இயக்கத்தையும் வழி நடத்திட வேண்டி, வாழ்த்தி 100 - விடுதலை சந்தாக்களையும் சேர்த்து மொத்தம் 188 விடுதலை சந்தாக்களை வழங்கியுள்ளனர். 


( முதல் சுற்று - 77, இரண்டாவது சுற்று - 54, மூன்றாவது சுற்று - 57) மூன்றாவது சுற்று சந்தா சேகரிப்பில் திருநாகேஸ்வரம் K.M.திருமண மகால் உரிமையாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சரவணன் உணவகம் தெ.சரவணன், தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் த.வெங்கடேசன்,  மு.இராணுவ வீரர் கி.நாகராஜன், உ.பாலசுப்ரமணியன் (தலைமை ஆசிரியர் ஓய்வு), தி.மு.க இளைஞரணி து.தலைவர் த.பாபு, எஸ்.பூங்கொடி (ஆசிரியை ஓய்வு), சி.எம். ரியல் எஸ்டேட் கே.இளங்கோவன், பாலகுரு மொட்டையன், அபி கன்ஸ்டிரக்ஸன் டி.கார்த்திகேயன், தி.க. விஜயகுமார் (Camp. S' pore), அம்மாசத்திரம் துபாய் தொழிலதிபர் ஏ.எஸ்.மூர்த்தி, பாபநாசம் ஆர்.விஜயகுமார் கூட்டுறவுதுறை செயலாளர், நெடுந்தெரு சரவணன், குடந்தை அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க து.செயலாளர் சுப.மாறன், குடந்தை முன்னாள் இராணுவ வீரர் க.இராம நாதன், சி.அம்பிகா, இராஜேஸ்வரி நாகராஜன், காமராஜ், மனோகர், கொற்கை நாதன், தில் லையம்பூர் முதியோர் காப்பகம் என்.நடராஜன், கோவிந்தகுடி மாசிலாமணி நினைவாக கோவிந்தகுடி நூலகத்திற்கு அவரது மகன் தாமரைசெல்வன், பட்டீஸ்வரம் போட்டோ மகாதேவன், குடந்தை வழக்குரைஞர் ஜார்ஜ், அம்மாசத்திரம் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ஷி.வி.மார்டின் ஆகியோர் தலா ஒரு விடுதலை சந்தாவினையும் திருநாகேஸ்வரம் வழக் குரைஞர் இரா.அழகியமணாளன் ஒரு உண்மை சந்தா வினையும் வழங்கி  ஆசிரியர் அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


No comments:

Post a Comment