செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 5, 2020

செய்தியும், சிந்தனையும்....!

வேலியே பயிரை...


ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 27 போலீசாரின் செல்போன் பறிமுதல்.


என்ன செய்வது! வேலியே பயிரை மேய்கிறது!


மண்ணுருண்டை மாளவியாக்கள்


கேள்வி: அமைச்சர் செல்லூர் ராஜூ, குடும்பத்தோடு 'காசி'க்குச் சென்றதுபற்றி...?


பதில்: பெரியார் பூமியில் இருந்து எடுத்துக் கொண்டு போன மண் காசியில் கரைந்திருக்கிறது. - 'துக்ளக்', 8.12.2020


கடலைத் தாண்டிச் செல்லுவது இந்து மதத்திற்கு விரோதம் என்பதால், வட்ட மேஜை மாநாட்டிற்குச் சென்ற மாளவியா இந்திய மண்ணை எடுத்துச் சென்றாரே, அப்போது கரைந்தது இந்து மதமா?


அ.தி.மு.க.தான் ஆன்மிக தி.மு.க.வாக மாறிவிட்டதே - அந்த உதாரணமே தவறு. சரி, பெரியார் மண்ணில்தானே சாமிநாதன் குருமூர்த்திகளின் வயிற்றுப் பிழைப்பும் நடக்கிறது.


குரு பத்தினியைக் கற்பழித்த சந்திரன் கதையோ!


கேள்வி: ஆசிரியர் ஒரு குருவுக்குச் சமம். 100 குரு ஒரு தந்தைக்குச் சமம். 1000 தந்தை ஒரு தாய்க்குச் சமம் என்று மனுநூல் குறிப்பிடுகிறதே, இதுகுறித்து...?


பதில்: இதையெல்லாம் விட்டுவிட்டு மனுதர்மத்தில் வேறு எதை எதையோ படித்து, தப்புத் தப்பாகப் புரிந்துகொண்டு, தாறுமாறாகப் பேசுபவர்களை, எதையும் படிக்காத பத்திரிகையாளர்களும் பிரபலமாக்குகிறார்களே என்று சிரிப்புதான் வருகிறது. - ‘துக்ளக்', 8.12.2020.


மனுதர்மத்தில் எந்த அத்தியாயம், எத்தனையாவது சுலோகம் என்று எல்லாம் ஆதாரம் கொடுக்கமாட்டார்கள் - கேட்டால் அக்கப்போர்தான் அவாளின் பத்திரிகா தர்மம்.


மலத்தில் அரிசி பொறுக்குகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


குருவைப்பற்றி சிலாகிக்கிறதே ‘துக்ளக்.' குரு பத்தினியைக் கற்பழித்தவன் சந்திரன் என்ற இவர்களின் மதவிடயம் என்னாயிற்று?


No comments:

Post a Comment