‘கோமாதாவின்' கடி!
கருநாடகம் - உடுப்பி கிருஷ்ணா மடத்தில் கோபூஜை நடத்தி பசுவுக்குப் பழம் கொடுத்த கருநாடக மாநில பா.ஜ.க. தலைவர் நவீன்குமார் கட்புவின் கட்டை விரலை பசு கடித்துவிட்டது - ஆசாமி வலியால் துடித்தார்.
இந்தப் பகல் வேசங்கள் கோமாதாவுக்கே பிடிக்கவில்லையோ!
பா.ஜ.க. ஆட்சியில்....
கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் பிரிவு உதவியாளர் அதிக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி.
பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் நாடே தற்கொலை செய்துகொள்ளும் நிலைதானே!
செத்த மொழி சிம்மாசனம்?
மத்திய அரசு - பொதிகைத் தொலைக்காட்சியில் நாள்தோறும் சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பு.
செத்துச் சுண்ணாம்பாகிப் போன ஒரு மொழியில் செய்தி சொல்லுவதால் மக்களுக்குப்பயன் இல்லை என்றாலும், பார்ப்பனர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை.
தள்ளுபடி சரியே!
கீதையைப் பாடத்தில் சேர்க்கக் கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி.
பிறப்பின் அடிப்படையில் வருணப் பிரிவை வலியுறுத்தும் ஒரு நூல் சமுதாயத்திலிருந்தே தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்றுதானே!
மத்திய அரசும் - நீதிமன்றமும் கூட்டு!
உயர்கல்வி படித்து பணக்கார நாடுகளுக்கு இடம் பெயர்வோரில் முதலிடம் இந்தியருக்குத்தானாம்!
இப்படிப் பட்டவர்களுக்குத்தான் சலுகைகளும், இட ஒதுக்கீடுகளும் ஜோராக மத்திய பா.ஜ.க. அரசால் குவிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு, மருத்துவத் துறையில் சிறப்பு உயர் பட்டப் படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது - இதில் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் கூட்டு!
No comments:
Post a Comment