தமிழ் வழியில் படித்தோருக்கு கலைஞர் ஆட்சியிலேயே அளிக்கப்பட்ட 20 விழுக்காடு இடஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 11, 2020

தமிழ் வழியில் படித்தோருக்கு கலைஞர் ஆட்சியிலேயே அளிக்கப்பட்ட 20 விழுக்காடு இடஒதுக்கீடு

 தமிழை பயிற்று மொழியாக தேர்ந்தெடுத்த வர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து, 2010ஆம் ஆண்டு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்த சட்டம் <https://cms.tn.gov.in/sites/default/files/acts/act40_2010_amend_TN_PSTM_Act2010.pdf> 2010 ஆம் ஆண்டே இந்த சட்டம் வந்து விட்டது என்றால், தற்போது அதிமுக அரசு ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கிறதே... அது என்ன?

+2 வரைக்கும் ஆங்கில வழியில் படித்து விட்டு, பட்டப்படிப்பை மட்டும் ஒரு சிலர் தமிழ் வழியில் படித்து அந்த 20% இட ஒதுக் கீட்டை பெற்றார்கள் என்று கூறி, அந்த புதிய சட்ட திருத் தத்தை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. அப்படி செய் கிறவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கைதான் என்றாலும், அது தடுக்கப் பட வேண் டியது என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே புதிய சட்ட திருத்தத்தின்படி, 10, 12ஆம் வகுப்புகளும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

ஆனால், இதுவரையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்ததே இல்லை என்பது போலவும், தாங்கள் தான் முதல்முதலாக அதை கொண்டு வந்தது போலவும் அடிமைகள் பொய்ப் பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறார்கள்.

- பூதம்  முகநூல் பக்கத்திலிருந்து

No comments:

Post a Comment