தஞ்சை 205 விடுதலை சந்தா
தஞ்சாவூர்மாவட்டத்தில் 30.11.2020 திங்கள் அன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் மாவட்டத்தலைவர் சி.அமர்சிங் மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாநில இளைஞரணி செயலாளர்த.சீ.இளந்திரையன் உள்ளிட்டோர் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை 9.15மணிக்கு பூதலூரில் தொடங்கி முல்லைக்குடி, அகரப்பேட்டை, பழமா நேரி, திருக்காட்டுப்பள்ளி, வளப்பக்குடி, திருவையாறு, அம்மன்பேட்டை, சாலியமங்கலம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், செண்பகபுரம், குடிக்காடு, தென் கொண்டார் இருப்பு, அருள்மொழிப்பேட்டை, ஞானம் நகர், தஞ்சாவூர்ஆகிய ஊர்களுக்குச் சென்று இரவு 8.00மணிக்கு உரத்த நாட்டில் சந்தா திரட்டும் பணி நிறைவடைந்தது. 47 ஆண்டு சாதா 158 அரையாண்டு சாதா என 11மணி நேரத்தில் 205சந்தாக்கள் சேகரித்து ரூ.2,26,800 வழங்கி மகிழ்ந்தனர். அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஒன்றிய நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அன்புடன் வரவேற்று சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தனர், சந்தித்த அனைத்து கட்சி நண்பர்களும் இன்முகத்துடன் சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தனர்.
மாவட்ட அமைப்பாளர் மா.வீரமணி, கழகப் பேச்சாளர் கலைவாணி வீரமணி 3 விடுதலை சந்தாவையும், அகரப்பேட்டை இரா.இராஜபாண்டியன் விடுதலை சந்தாவையும், தஞ்சை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ.நாராயணசாமி விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தாவையும், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையனிடம் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தாவையும், தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் துரையுண்டார்கேட்டை து.நாராயணசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.அன்பரசு சந்தாவையும், திருக்காட்டுப்பள்ளி பழ.கிள்ளிவளவன் சந்தாவையும், சிவா இனிப்பகம் திமுக சிவா கண்ணன் சந்தாவையும், திமுக பி.ஜெயராமன் சந்தாவையும், திமுக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தலையாமங்கலம் பாலு சந்தாவையும், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச .கண்ணன், ஒன்றியச் செயலாளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் ஆகியோர் சந்தாவையும், தஞ்சை மாவட்டம் பெரியார் பெருந்தொண்டர் மெ.அன்பரசு, தவமணி ஆகியோர் சந்தாவையும், திருக்காட்டுப்பள்ளி பழ.கிள்ளிவளவன் சந்தாவையும், உரத்தநாடு ஒன்றியம் துரையுண்டார்கேட்டை து.நாராயணசாமி ஆகியோர் சந்தாவையும், அகரப்பேட்டை இரா.இராஜபாண்டியன் சந்தாவையும், மணக்கரம்பை ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ் ஒரு சந்தாவையும், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச .கண்ணன், ஒன்றியச் செயலாளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் ஆகியோர் ஒரு சந்தாவையும், தஞ்சை ஒன்றிய துணைத் தலைவர் கள்ள பெரம்பூர் வ.சுந்தரமூர்த்தி ஒரு சந்தாவையும், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன் - கமலக்கன்னி ஆகியோர் ஒரு சந்தாவையும், அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் செண்புகபுரம் சாமி .தமிழ்ச்செல்வன் ஒரு சந்தாவையும், அம்மாபேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் சுடரொளி சந்தாவையும், அம்மாபேட்டை ஒன்றியம் கம்பர்நத்தம் கிருட்டிணமூர்த்தி ஒரு சந்தாவையும், அம்மாபேட்டை ஒன்றிய துணைத் தலைவர் சொ. உத்திராபதி சந்தாவையும், அம்மா பேட்டை ஒன்றிய துணைச் செயலாளர் இராஜந்திரன் சந்தாவையும், அம்மாபேட்டை ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ஒன்றியத் தலைவர் கி.ஜவகர், ஒன்றிய துணைச் செயலாளர் இராஜந்திரன் ஆகியோர் எட்டு சந்தாவையும், சாலியமங்கலம் துரை.தம்பித்துரை சந்தாவையும், அம்மாபேட்டை ஒன்றியம் திமுக ஒன்றியக் குழு உறுப்பினர் செண்பகபுரம் சு.சுப்பிரமணியன் சந்தாவையும், செண்பகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி பாஸ்கர் சந்தாவையும், அம்மாபேட்டை ஒன்றியக் குழு பெருந்தலைவர் தளவாய்பாளையம் தி.மு.க வீ.கலைச்செல்வன் சந்தாவையும், தஞ்சை நகர தலைவர் பா.நரேந்திரன் சந்தாவையும், தஞ்சை மாநகர செயலாளர் சு.முருகேசன் 8 சந்தாவையும், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர்பாண்டியன் 2 சந்தா, மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வழங்கிய 5 சந்தா உள்பட 7 விடுதலை சந்தாக்களையும், தஞ்சை குடும்ப விளக்கு நலநிதி பொறுப்பாளர் வேணுகோபால் 5 சந்தாவையும், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி 16 சந்தாவையும், உரத்தநாடு பெரியார் நகர் அ.உத்ராபதி 9 சந்தாவையும், தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியச் செயலாளர் ஆ.இலட்சுமணன், நகரத் தலைவர் பேபி ரெ. இரவிச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் ந.பிரபு ஆகியோர் 11 விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் ஆகியோரிடம் வழங்கினர்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் முல்லைக்குடி சட்ட எரிப்பு வீரர்கள் இரா.சிங்காரம் (82), ஆ. ஆழ்வார் (81) ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். அப்போது, பூதலூர் ஒன்றியச் செயலாளர் இரா.புகழேந்தி 3 விடுதலை சந்தா வழங்கினார். தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், பூதலூர் ஒன்றியத் தலைவர் அள்ளூர் பாலு உடனிருந்தனர். ( 30.11. 2020) தஞ்சை மாவட்டம் பூதலூர் நகரத் தலைவர் சட்ட எரிப்பு வீரர் ம.செல்லமுத்து அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாளான நவ.30 ஆம் தேதி கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். இதன் செல்லமுத்து, கோவிந்தம்மாள், தனியரசு ஆகியோர் 1 ஆண்டு விடுதலை சந்தா வழங்கினர்.மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன் உடனிருந்தனர். ( 30.11. 2020) தஞ்சை மாவட்டம் பூதலூர் நகரத் தலைவர் சட்ட எரிப்பு வீரர் ம.செல்லமுத்து அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாளான நவ.30 ஆம் தேதி கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். இதன் செல்லமுத்து, கோவிந்தம்மாள், தனியரசு ஆகியோர் 1 ஆண்டு விடுதலை சந்தா வழங்கினர்.மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் உடனிருந்தனர். ( 30.11. 2020). (மன்னார்குடி மாவட்டத்தில் சந்தா வழங்கியவர் பட்டியல் பின்னர் வரும்.)
No comments:
Post a Comment