ஜனவரி 2021 முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 9, 2020

ஜனவரி 2021 முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுமாம்

 மீண்டும் பதட்டத்தை தூண்டும் பாஜக தலைவர் அறிக்கை

 புதுடில்லி, டிச, 9 குடியுரிமை திருத்தச் சட்டம் வரும் 2021 ஜனவரி முதல்  அமலாகும் என பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கயா தெரிவித்துள்ளார்.

பாஜக நிறைவேற்றி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2014 ஆம் வருடம் டிசம்பர் 31 வரை வந்துள்ள இந்து, சீக்கியர், புத்த மதத்தவர், கிறித்துவர், சமணர் மற்றும் பார்சிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் பட உள்ளது.

நாடெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து  போராட்டங்கள் நடத் தியும் மத்திய அரசு இந்த சட்டத்தைத் திரும்பப் பெறவில்லை.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பேர ணியில் பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய பொதுச் செயல ருமான கைலாஷ் விஜய்வர்கயா கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார்.

கூட்ட முடிவில் அவர் செய்தியாளர்களிடம், “மத்திய அரசு ஒரு நியாயத்துடன் மத பாகு பாட்டால் வெளி நாட்டில் இருந்து தப்பி வந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடிவு செய்தது.  இதனால் உண்மை யாகக் குடியுரிமை தேவைப்படும் மேற்கு வங்க அகதிகள் பயன்பெறுவார்கள். இந்த சட்டம் வரும் ஜனவரியில் இருந்து அமலாக உள்ளது. பாஜக இவ்வாறு எண்ணி வரும் நிலையில் மேற்கு வங்க ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் அகதிகள் மீது கருணை இல்லாமல் நடந்துக் கொள்கிறது.” எனத் தெரிவித் துள்ளார்.

இதற்கு திருணாமுல் காங்கிரஸ் தலைவர் ஃபிர்ஹாத் ஹகீம், “பாஜக குடியுரிமை என எதைச் சொல்கிறது. 

1950 :ளில் மதக் கலவரத்தினால் வங்க தேசத்தில் (அப்போதைய கிழக்கு பாகிஸ் தானில்) இருந்து வந்த மத்துவாஸ் இந்தியக் குடி மகன்கள் இல்லையா?  அப்படியா னால் அவர்கள்     சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் எவ்வாறு வாக்களித்து வருகின் றனர்?  பாஜக மேற்கு வங்க மக்களை முட்டா ளாக்க வேண்டாம்.” எனப் பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment