தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறாதது ஏன்?
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, டிச.7 “தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்குத் தமிழக அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவிற்கு, 8 மாதங்களாக ஆளுநரின் ஒப்புதல் பெறாதது ஏன்?” என்று தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள் ளார். திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: பட்டப்படிப்பு படித்த வர்கள் நிச்சயம் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளிலும், 10ஆம் வகுப்புப் படித்தவர்கள் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலும் தமிழ்வழிக் கல்வி பயின் றிருந்தால் மட்டுமே-அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற முடியும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு-சட்டப் பேர வையில் ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டது.
அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்குப் பயனளிக்கும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு இவ்வளவு மாதங் களாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்? இப்போது உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கில், குரூப்-1 தேர்வுகளில் தமிழ்வழி பயின்றவர் களுக்கான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் எல்லாம்-மிக முக்கியமாகத் தமிழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் ஆக்கபூர்வமாகப் பணியாற்றும் வாய்ப்புள்ள குரூப்-1 பதவிகளிலேயே முறையாக இந்த இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட வில்லை என்று தெரிந்தும்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றம் ஒப்புதல் அளித்த சட்டத் திருத்தத் திற்கு அனுமதி பெறாமல்-ஆளுநருக்கு உரிய அழுத்தம் தராமல்,
“அரசியல் விளம்பரத்திற்காக” ஒவ்வொரு ஊராகச் சுற்றி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இந்த இட ஒதுக்கீடு, அலட்சியம் செய்யப்பட்டு, பாழ்படுத்தப்படுவது துவக்கத்திலிருந்தே தமிழ்வழியில் பயின்று-அரசு வேலைவாய்ப்பிற்காகக் காத் திருக்கும் லட்சக்கணக்கான இளை ஞர்களின் மனதில் எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறது. எனவே, துவக்கத்திலிருந்து தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன் னுரிமை அளிக்க - மார்ச் 16ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத் திருத்தத்திற்கு உடனடியாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
முதலமைச்சரே நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தி இந்தச் சட்டத்திருத்தத்திற்கான ஒப்புதலை எவ்விதத் தாமதமும் இன்றிப் பெற வேண்டும்; தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் இந்தச் சட்டத் திருத்தத் திற்கு ஒப்புதல் பெறுவதையும் காலம் தாழ்த்தி-அதற்காகத் திமுக ஒரு மாபெரும் போராட்டத்தை நடத் திடும் சூழ்நிலையை உருவாக்கிட வேண்டாம் என அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment