டாக்டர் ச.இராமதாஸ் டிவிட்டர் பதிவு
இன்று 88ஆவது பிறந்தநாள் காணும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நூற்றாண்டை கடந்து நல்ல உடல் நலத்துடன் பொதுப்பணியாற்ற வேண்டும் என்று விழைகிறேன்!
கனிமொழி எம்.பி.,
தந்தை பெரியாரின் கொள்கைகளை உயிர்மூச்சாகக் கொண்டு சமூகநீதிப் போராளியாக திகழும் மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மேலும் பல ஆண்டுகள் தன் சமூக நீதிப் பணியை தொடர்ந்து, மென்மேலும் வாழ வாழ்த்துகிறேன்.
தயாநிதி மாறன் எம்பி.,
இன்று பிறந்த நாள் காணும் திராவிடர் கழகத்தின் தலைவர் @AsiriyarKV அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழச்சி தங்கபாண்டியன் டிவிட்டர் பதிவு
பத்து வயதில் தொடங்கி, 88 வயதிலும், சுயமரியாதைச் சுடரேந்தி, சுறுசுறுப்பான இளைஞராய், இன, மொழிக் காவலராய் வலம் வரும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா @AsiriyarKV அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
No comments:
Post a Comment