ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய "வாழ்வியல் சிந்தனைகள்" தொகுதி 15, பேராசிரியர் அருணன் அவர்கள் எழுதிய "ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்", ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 5 ஆய்வுச் சொற்பொழிவுகளின் தொகுப் பான "ஒப்பற்ற தலைமை" ஆகிய மூன்று நூல்களும் தள்ளுபடி விலையில் ரூ400 க்கு எனக்கு வந்து சேர்ந்தன.
முதலில் வாழ்வியல் சிந்தனைகள் நூலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.
முதல் கட்டுரையிலேயே ஜப்பானிய முதியவர் களின் வாழ்க்கை முறை பற்றிய அதிக விளக்கம் தரும் IKIGAI இக்கிகை என்ற நூலை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.
சரி வேறு என்னென்ன நூல்களை குறிப்பிட்டுச் சொல்கிறார் என்று நான் குறிப்பெடுக்கத் தொடங்கி னேன். சில நூல்களை தொட்டுக் காட்டிச் செல்கிறார். சில நூல்களைப் பிழிந்து அந்த இனிய பழச்சாறை நமக்கு அருந்த தருகிறார்.
சில நூல்கள் நமது அறிவுப் பசிக்கு மருந்தாக அமையும். ஆசிரியரின் இந்த நூல் நமது அறிவுப் பசியை மேலும் மேலும் தூண்டி, மேலும் பல நூல்களை வாசிப்பதற்கான ஆர்வத்தை நமக்குக் கொடுக்கிறது.
வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 15 இல் ஆசிரியர் எடுத்தாண்ட நூல்களின் பட்டியலைப் பாருங்கள்.
* திருக்குறள் - உரிய இடங்களில் பொருத்தமான திருக்குறள்கள் பல, சுவையான பாயாசத்தில் இட்ட முந்திரிப் பருப்புகள் போல நமக்கு கிடைக்கின்றன.
* நான் ஏற்கனவே குறிப்பிட்ட நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்பதைப்பற்றிய ஜப்பானிய ரகசியம் பற்றி விளக்கும் "IKIGAI - இக்கிகை" என்ற நூல்.
* சந்தியா நடராஜன் அவர்கள் தமிழாக்கம் செய்த சீன தத்துவஞானி லாவோ ட்சு எழுதிய ”தாவோ தே ஜிங்” என்ற நூல்.
* பழ அதியமான் அவர்கள் பத்தாண்டு களுக்கும் மேல் கள ஆய்வு செய்து எழுதிய "வைக்கம் போராட்டம் " என்னும் நூல்.
* அண்ணா எழுதிய 'ஆரிய மாயை' யில் அண்ணா குறிப்பிடும் பிரஞ்சு பாதிரியார் ஆபே டூபே (Abbe Dubois) எழுதிய "Hindu Manners, Customs and Ceremonies" என்ற நூல். 1976ஆம் ஆண்டு மிசா சிறைக் கைதியாக சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தபோது ஆசிரியர் வாங்கி வரச்சொல்லி, வீட்டில் கடுமையான பணக்கஷ்டம் இருந்தபோதிலும் வாங்கிக் கொடுத்த நூல்.
* Freedom at Midnight அதாவது நள்ளிர வில் சுதந்திரம் என்ற நூலை வாசிக்கலாம் என்று வாங்கியநாளின் நள்ளிரவில் தான் ஆசிரியர் அவர் களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு மிசாவில் கைதுசெய் யப்பட்டார்.
* சிறையில் விடுதலை பழைய வால்யூம்களை சிறை அதிகாரிகள் அனுமதியோடு வாங்கி குறிப்புகள் எடுத்து எழுதிய நூல் "வகுப்புரிமை வரலாறு"
* ஆசிரியர் வாசித்து முடித்தவுடன் விடுதலை நாளிதழ் (பழைய தொகுதி) கோப்புகளை திரு முர சொலி மாறன் அவர்கள் வாங்கி நீதிக்கட்சி வரலாறு எழுத குறிப்புகள் தயாரித்துள்ளார். சற்று காலந்தாழ்ந்து " திராவிடர் இயக்க வரலாறு” என்னும் நூலை தக்க தரவுகளுடன் மிக அருமையாக எழுதினார் என ஆசிரியர் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
-திருநாவுக்கரசன் மனோரஞ்சிதம்,
குற்றாலம்.
No comments:
Post a Comment