ஆண்டிபட்டி, டிச. 5- இந்த கரோனா காலத்திலும் திராவிடர் கழக போரா ளிகள் இரண்டு முறை குருதிக்கொடை முகாம் நடத்தி கொள்கை திருவிழா கண்டனர்.
ஆண்டிபட்டியில் - 24.09.2020 வியாழக் கிழமை மாபெரும் குருதிக் கொடை முகாம் மு. அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர் தி.க), தலைமையில், பூ.மணிகண்டன் (தி.க தேனி மாவட்ட செயலாளர்), செயல் வீரர் ம. சுருளிராசு (தலைவர், தி.க தேனி மாவட்ட இளைஞர் அணி), போடி கருப்புச்சட்டை நடராசன் (தி.க திண்டுக்கல் மண்டல செய லாளர் கூடலூர்) முன்னிலையில் ஆண்டி பட்டி செ. அசோக்குமார், செ.ராம்குமார் சிறீநி சூப்பர் மார்க் கெட் மற்றும் அருவி டெய்ரி & ஃபுட்ஸ் பிரைவேட்லிமிட் முகாமை துவக்கி வைத்தனர். ஸ்டார். சா.நாக ராசன் (தி.க துணைத் தலைவர் தேனி மாவட் டம்) முதல் குருதிக் கொடை கொடுத்து துவக்கி வைத்தார். ஆ. மகராசன் (ஆண்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர்) முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பெ. ஆசையன், மரு.மு.சரவணன், (கனிமல் ஓமி யோபதி மருத்துவமனை), சிபிஎம் தோழர்கள் வே. பரமேஸ்வரன், பா. பிச்சைமணி க. முனீஸ்வரன் முன் னாள் பேரூராட்சி தலைவர் ஆ. ராம சாமி மற்றும் நூற்றுக்கு மேற்பட்டவர் கள் முகாமில் கலந்து கொண்டனர் தகுதியான குருதிக் கொடைஞர்கள் மொத்தம் 68 நபர் கள் குருதிக்கொடை வழங்கினர்.
வரவேற்புக் குழு: கா. மணிகண்ட நாதன் (செயலாளர் நோபுள் டோன்ஸ் கிளப்), நகர தலைவர் வே.ஜோதி. நகர துணைத் தலைவர் மு.அழகர்ராசா நகரச் செயலாளர் இரா. ஆண்டிச் சாமி, நகர ஒருங் கிணைப்பாளர் பொறியாளர் இரா. சதீஷ்குமார், தி.க ஒன்றிய தலைவர் செ.கண்ணன் மில் காந. கணேசன் ஞா. சுந்தர் சு. ராஜசேக ரன் த. திருவா சகம். குருதிக்கொடை வழங்கிய அனைவருக்கும் ஸ்டார் அறக்கட்ட ளையின் சார்பாக பழம் பிஸ்கட் உணவு வழங்கப்பட்டது. சேகரிக்கப் பட்ட குருதி பொட்டலங் கள் (யூனிட் கள் ) தேனி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனை குருதி வங்கிக்கு நன் கொடையாக வழங்கப் பட்டது.
குறிப்பு: கரோனா நெருக்கடி காலத்தில் 5.5.2020இல் நம் தோழர்கள் 35 நபர்கள் அரசு மருத்துவ மனைக்குச் சென்று குருதி வழங்கினார்.
No comments:
Post a Comment