புதுடில்லி,டிச.10, வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறிய சமரசத்தை ஏற்க மறுத்த விவசாயிகள், தங்கள் போராட் டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். டிசம்பர் 14ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும், டில்லிக்குள் நுழையும் அனைத்து சாலை களையும் ஒவ்வொன்றாக முடக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத் தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பந்த் போராட்டம் நடந்த நிலையில், இரவு 8 மணிக்கு விவசாய சங்கங் களின் 13 பிரதிநிதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசினார். 3 மணி நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. 3 சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் கடும் உறுதிப்பாடுடன் இருக்கின் றனர். மத்திய வேளாண் அமைச்சருடன் இன்று நடப்பதாக இருந்த 6ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவ தில்லை என விவசாயிகள் அறிவித்தனர்.
இது மத்திய அரசுக்கு மேலும் பின்ன டைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், சட்டத்தில் பாதக மாக விவசாயிகள் கருதும் அனைத் தையும் நிவர்த்தி செய்து, அதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வர தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ முன்மொழிவு விவசாயிகளிடம் நேற்று தரப்பட்டது. இது குறித்து ஆலோசித்த போராட்ட களத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய அரசின் இந்த சமரச திட்டத்தை நிராகரித்தனர். மேலும், தங்கள் போராட்டத்தை செய லிழக்க செய்ய மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக கண்டனம் தெரிவித்து, போராட் டத்தை தீவிரப்படுத்த இருப்பதாக அறிவித்தனர். இது குறித்து விவசாயிகளின் தலைவர் சிவ் குமார் காக்க செய்தியாளர்களுக்கு அளித்த பேட் டியில், ‘‘மத்திய அரசின் இன்றைய பரிந் துரையை முழுமையாக நிரா கரிக்கிறோம். இனி எங்கள் போராட்டத்தை தீவிரப் படுத்த முடிவு செய்துள்ளோம். வரும் 12ஆம் தேதியோ அதற்கு முன்பாகவோ ஜெய்ப்பூர்-டில்லி மற்றும் டில்லி-ஆக்ரா விரைவுச் சாலைகளை முடக்குவோம். டில்லிக்குள் நுழையும் அனைத்து சாலை களையும் படிப்படியாக முடக்குவோம்’,’ என்றார்.
மற்றொரு விவசாய சங்க பிரதிநிதிகள் தலைவர் தர்ஷன் பால் கூறுகையில், ‘‘அமித்ஷா ஆலோசனையில் கூறிய விஷயங்களையே இன்று எழுத்துப் பூர்வமாக தந்துள் ளனர். சட்ட திருத்தம் செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட் டோம் என ஏற்கெனவே திட்ட வட்டமாக தெரிவித்து விட்டோம். 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். அதை தவிர்த்து வேறெந்த ஆலோசனையும் இல்லை.
இனி மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவ தில்லை. வரும் 14ஆம் தேதியில் நாடு முழுவதிலும் உள்ள பா.ஜ.க. அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடை பெறும். தேசிய அளவிலான இப்போராட்டத்தை தொடர்ந்து டில்லிக்கு செல்லும் சாலைகள் முடக்கப்படும்,’’ என்றார். மேலும், மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு ஆதரவாக செயல் படுவதை கண்டிக்கும் வகையில், அதானி, அம்பானி நிறுவன பொருட்களை புறக்கணிக்கப் போவ தாகவும், இனிவரும் நாட்களில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தப் போவதில்லை எனவும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment