சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 புதிய நீதிபதிகள் பதவியேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 4, 2020

சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 புதிய நீதிபதிகள் பதவியேற்பு


சென்னை, டிச. 4- நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம் என்ற பெருமையை சென்னை உயர்நீதிமன்றம், பெற்றுள்ளதாக பதவியேற்பு விழாவில் அரசு தலைமை வழக்குரைஞர் கூறியுள்ளார்.


சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.


நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ. நக்கீ ரன், வீ.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்தி குமார், கே.முர ளி சங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து 10 புதிய நீதிபதி களுக்கான பதவி ஏற்பு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. புதிய நீதி பதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 10 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டதால் உயர்நீதிமன்ற நீதி பதிகளின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள் ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 12- ஆக உள்ளது.


இந்த விழாவில் கலந்துகொண்டு புதிய நீதிபதிகளை வரவேற்று அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் பேசியது:


என்னுடைய வாழ்நாளில் காலிப்பணியிடமே இல்லாமல், சென்னை உயர்நீதி மன்றத்தில் 75 நீதிபதிகள் பணியிடங்களும் நிரப்பப்பட்டு, அவர்கள் அனைவரும் ஒரு நேரத்தில் வழக்குகளை விசாரித்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். எனவே நீதி பதி காலிப்பணியிடங்களை நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரை ஞர்கள் அனைவது சார்பிலும் தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன். புதிய நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் பழைய வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என நம்புகிறேன். வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க அனைத்து வழக்குரைஞர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என உறுதியளிக் கிறேன்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 பெண் நீதி பதிகள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 4 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment