செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் 10 ஆண்டாக வழங்கப்படாத ‘கலைஞர் தமிழ் விருது’ தேர்வுக்குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 6, 2020

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் 10 ஆண்டாக வழங்கப்படாத ‘கலைஞர் தமிழ் விருது’ தேர்வுக்குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை

புதுடில்லி, டிச. 6- முன்னாள் முதல்வர் கலைஞர் செம்மொ ழித் தமிழாய்வு மத்திய நிறு வனத்துக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு, ஜூன் 30இல் ரூ.1 கோடியை வைப்புத் தொகை யாக வழங்கினார். இதன் மூலம் ஆண்டுதோறும் ‘கலை ஞர் மு.கருணாநிதி செம்மொ ழித் தமிழ் விருது’ வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டது.


இவ்விருது, ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ், அய்ம்பொன்னால் ஆன திருவள்ளுவர் சிலை, கலைஞர் உருவம் பொறித்த தங்கப்பதக்கம் ஆகியவற்றைக் கொண்டது. தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு, நுண்கலை ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி யுள்ள ஆய்வாளருக்கோ, ஆய்வுக் குழுவினருக்கோ இந்த விருது வழங்கப்படும்.


2009ஆம் ஆண்டுக்கான முதல் விருதை பின்லாந்து அறிஞரான அஸ்கோ பர்போ லோவுக்கு கோயம்புத்தூரில் 2010இல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார். இதற்கு பின் 2011 முதல் 2016 வரையிலான ஆண்டுகளுக்கான விருது அறி விப்பு 2017இல் வெளியானது. கடைசியாக 2020 ஏப்ரல் வரை யிலான விருது அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் இவற்றுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.


இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் வட் டாரத்தில் கூறுகையில், “பெற்ற விண்ணப்பங்களை பரிசீலித்து விருதாளர்களை தேர்வு செய்ய அதிமுக அரசு அக்கறை காட்ட வில்லை. அதில் தேவையின்றி மத்திய அரசின் பெயர் இழுக் கப்படுகிறது. ஏனெனில், கலைஞர் விருதுக்கும் மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தனர்.


இதை அளிப்பதில் தாம தம் ஏற்படுவதற்கு அந்நிறு வனத்தில் நிரந்தர இயக்குநர் இல்லாதது காரணமாகக் கூறப் பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் நிரந்தர இயக்குநர் பதவியில் அமர்த்தப்பட்ட பிறகும் விருது வழங்கப்படவில்லை.


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகிய 3 ‘செம் மொழி விருதுகள்’ குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக் கப்பட்டது. இந்த விருதுகளும் கடந்த 2016 முதல் 4 ஆண்டு களாக மத்திய அரசால் வழங் கப்படாமல் உள்ளன. இந்த விருதுகளுக்கான தேர்வுக் குழுவின் தலைவராக முன் னாள் தலைமைதேர்தல் ஆணை யர் என்.கோபால்சாமி 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக் கப்பட்டார். இவரது தலை மையிலான குழு தேர்வுசெய்து அனுப்பிய விருதாளர்கள் மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.


No comments:

Post a Comment