ஆசிரியருக்குக் கடிதம்  - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 5, 2020

ஆசிரியருக்குக் கடிதம் 

பாசமிகு தலைவருக்கு - படுக்கையிலிருந்தபடியே!...


மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களுக்கு,வணக்கம்.


எதிர்பாராமல் திடீரென தாக்கிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 14/11/2020 குடந்தையிலுள்ள விஜய் பாலி கிளினிக் மருத்துவ மனையில்,சிகிச்சை பெற்று 23/11/2020 அன்று இல்லம் திரும்பினேன். இருப்பினும் 15 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டுமெனக் கூறி விட்டார்கள். ஆகவே பாசமிகு தலைவர் அய்யா அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விடுதலை மலருக்குக் கூட ஒரு கட்டுரையோ கவிதையோ வழங்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மிகவும் வருந்துகிறேன்.


எனினும் தங்களின் பிறந்த நாளை ஒட்டி..முகநூல் வாயிலாக பலமுறை தங்களைப் பற்றிய வாழ்த்துகளை செய்திகளாக பதிவு செய்து


நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.


'ஒரு சுயமரியாதைக்காரனாக வாழ்ந்து பார்..போர் வீரனைப் போல சாவைப் பற்றிய பயமே வராது' என்ற அய்யா தந்த துணிவும், தங்களை நேரில் சந்தித்த போதெல்லாம்..தாங்கள் தந்த அறிவுரைகளுமே நான் விரைவில் நலமடைய பேருதவியாக இருந்தது.


விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமிருப்பின்..பேசுவதற்குக்குக் கூட அல்ல..பார்ப்பதற்கே பகைவர் அஞ்சுவர்..என்பது போல இன்னும் சில நாட்களில் முழு வேகத்தோடு மீண்டெழுந்து என் தொண்டறம் தொடருவேன் என உறுதி கூறுகிறேன்!..அய்யாவின் அடிச்சுவட்டில் அடிபிறழாது வெற்றி நடை போட்டுவரும் தங்களுக்கு எங்கள் சுயமரியா தைக் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கி றேன்!


திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்..மானமிகு திராவிடத்தளபதி ஸ்டாலின் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்க நாளும் உழைக்க..விரைவில் நானும் மீண்டெழுந்து வருவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!..


தங்களுக்கு மீண்டும்  எங்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!..


வணக்கம்!..


தங்களின் அன்பிற்குரிய,


நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.


No comments:

Post a Comment