ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி படுகொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 28, 2020

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி படுகொலை

டெக்ரான், நவ. 28- ஈரான்  நாட்டின் அணு சக்தி திட்டத்தின் மூளையாக செயல் பட்டவர் மோசென் ஃபக்ரிசாதே. இவர் அந்நாட்டின் 'அணுகுண்டின் தந்தை' என அழைக்கப்படுகிறார். ஈரான் தலை நகர் டெக்ரானில் காரில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து  அடையாளம் தெரியாத நபர்கள் துப் பாக்கியால் சுட்டனர்.


இதில் படுகாயமடைந்த அவர் மருத் துவமனை கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். இந்த தாக்குதலில் ஃபக்ரிசாதேவின் காவலர்களும் காயம் அடைந்தனர். அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிசாதே படுகொலையில் இஸ்ரே லுக்கு தொடர்பு இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.


இஸ்ரேலில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அந்நாட் டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, மோசென் ஃபக்ரிசாதேவின் பெயரை குறிப்பிட்டு பேசினார். அதனால் இஸ் ரேலுக்கு இச்சம்பவத்தில் கண்டிப்பாக தொடர்பு இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment