சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கு தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 13, 2020

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கு தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை

புதுச்சேரி, நவ. 13-- புதுச்சேரியை அடுத்த சாத்தமங்கலம் பகுதி யில் கன்னியப்பன் என்பவர் நடந்தி வரும் வாத்துப் பண் ணையில், கடந்த 2 ஆண்டு களாக கொத்தடிமைகளாக இருந்த காஞ்சிபுரம் மாவட் டத்தைச் சேர்ந்த 6 முதல் 14 வயதுள்ள 5 சிறுமிகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைகள் நல மய்யக் குழுவினர் மீட்டனர். விசார ணையில், சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது.


இதுதொடர்பாக, பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார், உறவினர்கள் பசுபதி, சிவா, அய்யனார், மூர்த்தி ஆகிய 6 பேர் ஏற் கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். இந்த வழக்கில் தலை மறைவாக இருந்த கன்னியப் பனின் மற்றொரு மகன் சரத் குமார்(22) மற்றும் 15 வயது சிறுவன் உட்பட 2 பேரை மங்கலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சிறுமிகள் பாதிக்கப்பட்டது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் 12.11.2020 அன்று புதுச்சேரி மங்கலம் காவல் நிலையத்தில் முதலில் விசாரணை நடத்தினார். பின் னர், அவர் கூறியது: இது தேசிய அளவில் முக்கியத்துவம் மிக்க வழக்காகும். விசாரணை அறிக் கையை டில்லியில் உள்ள ஆணையத் தலைவரிடம் சமர்ப்பிப்போம். காவல் துறை யினர் சரியான முறையில் விசாரணை நடத்துகின்றனர். மேலும் சிலருக்கு இதில் தொடர்பு உள்ளது. அவர்க ளும் கைதாவார்கள் என்றார்.


No comments:

Post a Comment