சென்னை, நவ. 12- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், டிசம்பர் 2-ஆம் முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல் & தொழில்நுட்ப மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் என்றும் அறிவிக் கப்பட்டு உள்ளது.
கரோனா பொது முடக்கத்தில் அளிக் கப்பட்டு வரும் தளர்வுகள் காரணமாக நாடு முழுவதும் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, பல மாநிலங் களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட் டுள்ளன. இதன் காரணமாக ஆசிரியர் களும், மாணவர்களும் கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழகத்திலும் வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதல் கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அறிவித்தார். இதற்கு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்படப் பெற்றோர் களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உயர்நீதி மன்றத்திலும் பள்ளி கள் திறக்க தடை விதிக்கக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு பெற் றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. அதில், 50 சதவிகிதத்திற்கும் மேலான பெற்றோர்கள், தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறக்க வேண் டாம் என்று வேண்டுகோள் விடுத்திருப் பதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் கல்வித்துறை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு இந்த தகவலைத் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி கள், டிசம்பருக்குப் பிறகு பள்ளிகளை திறக்கலாமே என தமிழக அரசுக்கு அறிவுரை கூறியது. இது தொடர்பாக அரசு கலந்தாலோசித்து முடிவு அறி விக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார்.இந்த நிலையில், தற்போது முதல்வர் அலுவல கத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு ரத்து செய்யப்படுவ தாகவும், ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகத்தில் நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை. பள்ளிகள் திறப்பு தேதி சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், முதுநிலை மாணவர்களுக்குக் கல்லூரி திறக்கப்படுவதாகவும், டிசம்பர் 2 ஆம் தேதி முதல் அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கும், முதுநிலை இறுதி யாண்டு அறிவியல் & தொழில்நுட்ப மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங் கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிற கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு களை ஆரம்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முடிவுகள் எடுப்பதில் தடுமாறி வருகிறது. முதலில் 5ஆம் வகுப்பு 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு, பின்னர் அது ரத்து _ தொடங்கி நீட் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு என எதையுமே உறுதியான முடிவெடுக்காமல் அறிவிப்பு கொடுத்துவிட்டு மீண்டும் திரும் பப் பெறுவது வாடிக்கையாகி வருகிறது.
No comments:
Post a Comment