பெரியார் சிலையை உடைப்பதாக மிரட்டல்! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 29, 2020

பெரியார் சிலையை உடைப்பதாக மிரட்டல்!

இந்து அமைப்பைச் சேர்ந்தவர் கைது


கோவை, நவ. 29- கோவை பகுதியில், பெரியாருக்கு எதிரான கருத்து பதிவிட்டது தொடர்பாக இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கொலை மிரட் டல் விடுத்ததாக இந்த அமைப்பின் பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.


திரிபுராவில் பாஜக ஆட் சிக்கு வந்த உடன் அங்கு லெனின் சிலை உடைக்கப் பட்டது. அதனை அடுத்து சமூகவலைதளத்தில் பாஜக பிரமுகர் எச்.ராஜா தமிழகத் தில் பெரியார் சிலை உடை படும் என்று திமிரோடு பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட் டத்தை அடுத்து தொடர்ந்து தமிழகத்தில் இந்து அமைப் பினரால் பெரியார் சிலை அவமதிக்கப் பட்டு வருகிறது, இதில் பலர் கைதுசெய்யப் பட்டு வருகின்றனர். ஆனால் அவர்களில் பலர் தங்களுக்கு மனநோய் என்று மருத்துவச் சான்றிதழ் கொடுத்து தாங் களே பைத்தியம் என்று ஒப் புக்கொண்டு வருகின்றனர். வேறு சிலர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது


இந்த நிலையில்  ‘’பெரியார் சிலையை உடப்பேன்" என்று கோவையில் பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த மனோ கரன்  வாட்ஸ்அப்பின்  அவர் போட்ட பதிவு பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது.


இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த  கொண்ட கள்ளப் பாளையத்தை சேர்ந்த பிரபு  மனோகரனிடம்  இதுகுறித்து கேட்டுள்ளார்.அப்போது மனோகரன்,  அதைக்கேட்க நீ யார் என்று கேட்க, பிரபு  ‘’நான் பெரியார் பேரண்டா" என்று சொல்லியுள்ளார். இது தொடர்பாக  இடையே நடந்த வாக்குவாதத்தில், "கொலை செய்துவிடுவேன்" என்று பிரபுவை மனோகரன்  மிரட்டியதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து பிரபு கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்,  இந்து பாரத் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் மனோகரனை  கைது செய்து சிறையில் அடைத்துள் ளனர்.


No comments:

Post a Comment